ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்.... உங்களுக்கு புடிச்ச்ச கலர்க்கு என்னன்னு பாருங்க!

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Mar 25, 2019 | 14:50 IST | Times Now

ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு விதமான இயல்புகளை பிரதிபலிக்கிறது. வண்ணங்களின் இயல்புகள் இங்கே பார்ப்போம்.

characteristics of each colors
வண்ணங்கள்  |  Photo Credit: Getty Images

வண்ணங்கள் நம் எண்ணங்களைப் பிரதிபலிக்கும். தினமும் சந்தோஷமாக இருக்கும்போது அணியும் ஆடையின் நிறமும் மூட் அவுட்டாக இருக்கும்போது அணியும் ஆடையின் நிறமுமே அதற்கு சாட்சி. ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு விதமான இயல்புகளை பிரதிபலிக்கிறது. வண்ணங்களின் இயல்புகள் இங்கே பார்ப்போம்.

சிவப்பு: அனைத்து வண்ணங்களை விட சிவப்பு நிறம்தான் கவனத்தை ஈர்க்கும். அதனாலேயே கவனமாக இருக்கவேண்டிய இடங்களில் டேஞ்சர் லைட்டாக சிவப்பு நிறம் இருக்கிறது. காதல், பேரார்வம், ஆசை, உறுதி, சக்தியைப் பிரதிபலிக்கிறது.

பச்சைஇயற்கையின் வண்ணம். நல்லிணக்கத்தை தூண்டுகிறது. உண்மை, விசுவாசத்தைப் பிரதிபலிக்கிறது. உலகின் பெரும்பாலும் பணம் பச்சைநிறத்திலேயே அச்சடிக்கப்படுகிறது. மனதுக்கும் உடலுக்கும் பச்சை நிறம் நல்ல அதிர்வலைகளைத் தருகிறது. மனதுக்கு அமைதியை, புத்துணர்ச்சியைத் தருகிறது. அதனால்தான் எங்கும் க்ரீன் சிக்னல்!

வெள்ளை: நம்பிக்கையை பிரதிபலிப்பது வெண்மை நிறம். கருப்பு நெகட்டிவ் என்றால் வெள்ளை பாசிட்டிவ். பெர்ஃபக்‌ஷனிஷ்டுக்களின் சாய்ஸ் வெள்ளை நிறம்தான். தூய்மை, நல்ல தொடக்கம், சுத்தம் வெள்ளையின் ஆட்டிடியூட்.

நீலம்கூலஸ்ட் கலர் நீலம்தான் . தன்னம்பிக்கை, ஃபீல் ப்ரீ, ஞானம், மென்மையை குறிக்கும். ஒரு நம்பகத்தன்மையை தரும் வண்ணம் இது. பெரும்பாலும் விளம்பர லோகோ நீல நிறத்தில் வருவதற்கு இதுவும் ஒரு காரணம். பெரும்பாலும் ஆண்களுக்குப் பிடித்த நிறம் இது. இதனாலேயே பெண் குழந்தை என்றால் பிங்கும் ஆண் குழந்தை என்றால் நீலமும் என்றாகிவிட்டது. (சூப்பர் மேன்) கருநீலம் அடர்த்தி, நிலைத்தன்மை, நிபுணத்துவத்தைக் குறிக்கும். அமெரிக்காவின் கொடி..ம்ம்ம் ஆனால் நீல நிறத்தை பெரும்பாலும் உணவுகளில் பயன்படுத்துதில்லை. நீலம் விஷத்தன்மையைக் குறிக்கும் என்பதால்.

பர்ப்பிள்: வானவிலில் கூல் கலர், வார்ம் கலர் எனப் பிரித்தால் நடுவே நிற்பது பர்ப்பிள். இதனால் நீல நிறத்தின் நிலைத்தன்மையும், சிவப்பு நிறத்தின் பளிச் தன்மையும் பர்ப்பிளுக்கு உண்டு. பர்ப்பிள் குழந்தைகளுக்கு பிடித்த நிறம். (பெண்களுக்கும்தான்) ஒரு காலம் வரை பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் நிறமாக இருந்ததாம். ஏனென்றால் பர்ப்பிள் நிறத்துக்கு அவ்வளவு டிமாண்ட். கிரியேட்டிவிட்டு, ஃபேண்டஸி, மேஜிக் எல்லாம் பர்ப்பிளுக்கு சொந்தம்.

கறுப்பு: ஒரு நிறம் வறுமையையும் வளமையையும் ஒருங்கே பிரதிபலிக்குமா? சாத்தானையும் சிலையையும் பிரதிபலிக்குமா, பணிவையும் பதவியையும் பிரதிபலிக்குமா... கறுப்பு நிறத்துக்கு இந்த ஸ்பெஷல் உண்டு!

இருளின் நிறம் கறுப்பு என்பதற்காகவே மர்மம், துக்கம் அனைத்துக்கும் கறுப்பு சிம்பளானது. முன்பு கறுப்பு டை கிடைப்பது சிரமம்.பர்ப்பிளைப் போலவே இயற்கையில் கறுப்பு நிறமும் கிடையாது. அதனால், செல்வந்தரகள் மட்டுமே அதிக விலை கொடுத்து கறுப்பு ஆடைகளை வாங்கினார்கள். அதுவே பின்னாளில் எலைட்டானவர்களில் நிறம் ஆனது.

கறுப்பு ஃபார்மல், எலைட், உழைப்பு அனைத்தும் பிரதிபலிக்கும் ஆல்இன் - ஆல் அழகுராஜா.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...