MorningMotivation: யார் துறவி, யார் சீடன்?

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Apr 01, 2019 | 15:10 IST | Times Now

மறுநாள் எழுந்த துறவி, இன்று நாம் யாரும் பிச்சை எடுக்கப் போகவேண்டாம். நேற்றிரவு இறந்த நண்பர் மிச்சம் வைத்து சென்ற உணவுப் பொருட்கள் இருக்கின்றது என்று கூறுகிறார். 

zen stories
ஜென் கதைகள்  |  Photo Credit: Getty Images

பிரபல ஜென் துறவி அவர். பல ஊர்களுக்கு சென்று பல கோயில்களில் ஜென்கதைகளைப் பற்றி கூறிவருகிறார். வயதானவுடன் இதுவரை அனைவருக்கும் போதித்தது போதுன் என்று முடிவெடுத்தவர், இறுதியாக சென்ற கோவிலில், தனது ஆதரவாளர்களிடம் தான் இனி போதனைகள் எதுவும் செய்யப்போவதில்லை என தெரிவித்துவிட்டு முத்து படத்தில் வரும் அப்பா ரஜினி போல யாருக்கும் எங்கே செல்கிறோம் என்பதை சொல்லாமல் சென்றுவிட்டார்.

நாட்கள் சென்றன, துறவியை அவரது ஆதரவாளர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஒரு சீடனுக்கு தான் உலகில் அனைத்தையும் கற்றுவிட்டோம் என்ற கர்வம் இருந்தது. இந்த துறவியைப் பற்றி கேள்விப்பட்டவன், இவரிடம் என்ன ஸ்பெஷல் இருக்கிறது, நான் இவரிடமும் கற்றுவிட்டால் இந்த உலகத்தின் சிறந்த குருவாக மாறிவிடுவோன் என்று எண்ணி துறவியை தேடத்தொடங்கினான். தீவிரமாக தேடி மூன்று வருடங்கள் ஒரு பிச்சைக்கார கூட்டத்தில் அவரை கண்டுபிடித்தான். 

துறவியிடம் சென்று தன்னை அவருடன் சேர்த்துக்கொள்ளும்படி சீடன் கேட்க, அதற்கு துறவி முதலில் முடியாது என்று கூறிவிட்டார். ஆனால் சீடன் விடுவதாயில்லை, சற்று யோசித்த துறவி, ‘’இரண்டு நாட்கள் என்னுடன் இரு. உன்னால் என்னைப் போல இருந்துவிட முடிந்தால் மூன்றாவது நாளில் இருந்து நான் உனக்கு போதனைகளை செய்கிறேன் என்கிறார். 

மகிழ்ச்சி அடைந்த சீடர் மறுதினமே ஒரு பிச்சைக்காரர் போல உடையிடுத்தி துறவியின் கூட்டத்தில் சேர்ந்துகொண்டான். அன்றைய தினம் அதக்கூட்டத்தில் இருந்த ஒரு பிச்சைக்காரர் இறந்துவிட, அவர்களை நல்லிரவு உடலை எரித்துவிட்டு வந்து படுத்தனர்.

துறவி நன்றாக உறங்கிப்போனார். ஆனால் இந்த சீடனால் தூங்கவே முடியவில்லை. மறுநாள் எழுந்த துறவி, இன்று நாம் யாரும் பிச்சை எடுக்கப் போகவேண்டாம். நேற்றிரவு இறந்த நண்பர் மிச்சம் வைத்து சென்ற உணவுப் பொருட்கள் இருக்கின்றது என்று கூறுகிறார். 

மற்றவர்கள் அனைவரும் சாப்பிடத்தொடங்கினர். ஆனால் சீடனால், அந்த உணவை ஒரு வாய்கூட சாப்பிடமுடியவில்லை. அவரைப் பார்த்த துறவி, ’’உன்னால் என்னைப்போல இருக்க முடியாது, அப்படி இல்லாதவர்களுக்கு இங்கெ இடமில்லை, என்னை தொந்தரவு செய்யாமல் இந்த இடத்தைவிட்டுப் போய்விடு’’ என்று கூறினார்.

புரிந்துகொண்ட சீடன் அதன்பிறகு அந்தத்துறவியை சந்திக்கவே இல்லை. 

NEXT STORY
MorningMotivation: யார் துறவி, யார் சீடன்? Description: மறுநாள் எழுந்த துறவி, இன்று நாம் யாரும் பிச்சை எடுக்கப் போகவேண்டாம். நேற்றிரவு இறந்த நண்பர் மிச்சம் வைத்து சென்ற உணவுப் பொருட்கள் இருக்கின்றது என்று கூறுகிறார். 
Loading...
Loading...
Loading...