மொரட்டு சிங்கிள்களுக்கு தனி இடம், அசத்தும் மயிலாடுதுறை ஹோட்டல்!

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Aug 03, 2019 | 17:19 IST | Times Now

மயிலாடுதுறையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மொரட்டு சிங்கிள்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Special Space for 'Morattu Singles' in a Hotel
மயிலாடுதுறை ஹோட்டலில் மொரட்டு சிங்கிள்களுக்கு இட ஒதுக்கீடு   |  Photo Credit: Facebook

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மொரட்டு சிங்கிள்களுக்காக பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டு உணவில் 50 சதவீத தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

காதலிக்க யாருமின்றி தனியே இருப்பவர்கள், அதற்கு விருப்பம் இல்லாமல் இருப்பவர்கள்  'மொரட்டு சிங்கிள்' என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பார்க், பீச், திரையரங்கம் என்று எங்கு சென்றாலும் காதல் ஜோடிகள் உலவுவதை கண்டு கடும் மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்காகவே மயிலாடுதுறையில் போர்பிஸ்டைங் சாலையில் உள்ள நவாப் ஹோட்டல் இயங்கிவருகிறது.

இந்த ஹோட்டலில் ஒரு பகுதியை மொரட்டு சிங்கிள்களுக்காக ஒதுக்கி, அங்கு 'ஒன்லி என்ட்ரி ஃபார் மொரட்டு சிங்கிள்ஸ்' என்று பலகை வைத்துள்ளனர். மேலும் அங்கு உணவருந்தவரும் சிங்கிள்ஸ்களுக்காக ஒருவர் மட்டும் உட்காரும் மேசையும் நாற்காலியும் அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இன்றி அவர்கள் உண்ணும் உணவுக்கு 50 சதவீத தள்ளுபடி அளிக்கிறது அந்த ஹோட்டல். 'மொரட்டு சிங்கிள்களை கவரும் இவர்களின் இந்த அதிரடி முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

 

 

பெரும்பாலான '90-ஸ் கிட்ஸ் மொரட்டு சிங்கள்களாக இருக்கும் காரணத்தினால், ஹோட்டலில் இந்த பகுதியின் சுவர்களில் பம்பரம், பச்சை குதிரை, காத்தாடி என்று தொன்னூறுகளை நினைவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஹோட்டலின் இந்த வியாபார யுக்தி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலின் புகைப்படங்களை மொரட்டு சிங்கள்கள் சமூக ஊடகங்களில் தற்போது ஷேர் செய்து வருகிறார்கள்.

NEXT STORY
மொரட்டு சிங்கிள்களுக்கு தனி இடம், அசத்தும் மயிலாடுதுறை ஹோட்டல்! Description: மயிலாடுதுறையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மொரட்டு சிங்கிள்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...