'ஜீரோ மலேரியா தேசம் இங்கிருந்தே துவங்கட்டும்’ -ஆப்ரிக்காவில் புதிய மருந்து கண்டுபிடிப்பு!

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Apr 26, 2019 | 20:04 IST | Times Now

ஆப்ரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்கு உட்பட்ட 2 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் மலேரியா காய்ச்சலுக்கு உயிரிழக்கின்றனர்.

africa, ஆப்ரிக்கா
கொசு மாதிரிப்படம்  |  Photo Credit: Getty Images

லிலாங்கே: உலகின் முதல் மலேரியா காய்ச்சல் தடுப்பு மருந்தினை ஆப்ரிக்காவின் மலாவி நாட்டில் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இதனை உலக சுகாதார நிறுவனமும் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. RTS,S என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த தடுப்பூசியை ஆப்ரிக்காவில் உள்ள கென்யா, கானா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் விரைவில் முன்னெடுக்க உள்ளனர்.

மலாவியில் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் உலகெங்கும் கொசுவால் உருவாகும் மலேரியாவிற்கு 4 லட்சத்து 35 ஆயிரம் குழந்தைகள் உயிரிழக்கின்றனர். இதில் 50 சதவீதம் பேர் ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள்.

ஆப்ரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்கு உட்பட்ட 2 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் மலேரியா காய்ச்சலுக்கு உயிரிழக்கின்றனர். ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு குழந்தை உயிரிழக்கின்றனர். இந்த நோய்க்கு தடுப்பு மருந்து கண்டறிய உலக நாடுகள் தீவிரமாக முயன்று வந்தன.

இதனையடுத்து இந்த புதிய மருந்து வெற்றிகரமாக கண்டறியப்பட்டுள்ளது. மலாவியைத் தொடர்ந்து கானா, கென்யா உள்ளிட்ட நாடுகளில் வரும் ஆண்டுகளில் மலேரியா தடுப்பூசி பயன்படுத்தப்பட உள்ளது. இந்த தடுப்பூசி மூலம் உலகளவில் அதிக குழந்தைகளை உயிரிழக்கச் செய்யும் மலேரியாவிற்கு முடிவு கட்ட முடியும் என்று நம்பிக்கை அளித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.

NEXT STORY
'ஜீரோ மலேரியா தேசம் இங்கிருந்தே துவங்கட்டும்’ -ஆப்ரிக்காவில் புதிய மருந்து கண்டுபிடிப்பு! Description: ஆப்ரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்கு உட்பட்ட 2 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் மலேரியா காய்ச்சலுக்கு உயிரிழக்கின்றனர்.
Loading...
Loading...
Loading...