யோகாதினம்: உடல் வலுப்பெற, உடல் எடைக் குறைய, தலைவலி நீங்க... மோடி பதிவிடும் யோகா வீடியோக்களைப் பார்த்தீர்களா?

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
விபீஷிகா
விபீஷிகா | Principal Correspondent
Updated Jun 20, 2019 | 15:52 IST

பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான யோகாசனத்தைப் பற்றியும் அதன் பயன்களைப் பற்றியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். அவற்றுள் சில முக்கியமான ஆசனங்களைப் பார்க்கலாம்.

PM Modi teaches yoga asanas
PM Modi teaches yoga asanas  |  Photo Credit: Twitter

ஜூன் 21-ஆம் தேதியான நாளை சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பாரம்பரிய கலையான இந்த யோகாவைப் பற்றிய விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21ஆம் நாளை உலகம் முழுவதும் யோகா தினமாகக் கடைபிடிக்கச் செய்தது. இந்த தினத்தன்று இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்பினர் யோகா நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். பிரதமர் மோடியும் தீவிரமாக யோகாவைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். ஒவ்வொரு வருடமும் மக்களுடன் சேர்ந்து அவரும் யோகா தினத்தன்று யோகா செய்வது வழக்கம். இந்த ஆண்டு முன்னதாகவே திட்டமிட்டு அவர் யோகா செய்வதுபோல அனிமேஷன் செய்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான யோகாசனத்தைப் பற்றியும் அதன் பயன்களைப் பற்றியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். அவற்றுள் சில முக்கியமான ஆசனங்களைப் பார்க்கலாம்.

சூரிய நமஸ்காரம்:

சூரிய நமஸ்காரம் மொத்தம் 12 ஆசனங்களைக் கொண்டது. வேலை காரணமாக காலையில் யோகா செய்ய நேரம் இல்லாதவர்கள் இந்த ஒரு ஆசனத்தையாவது தினமும் செய்யுங்கள். இந்த சூர்ய நமஸ்காரத்தைச் செய்வதால் நுரையீரலின் செயல்பாடுகள் மேம்படுகிறது. டயபெட்டீஸ் வருதற்கான காரணிகளைக் கட்டுப்படுத்துகிறது. தசைகளை வலுபெறச் செய்கிறது. ஹைபர் டென்ஷன் ஆகாமல் இருக்க உதவுகிறது. பெப்டிக் அல்சர் வருவதைத் தடுக்கிறது. சியாடிகா எனும் கீழ் முதுகு வலி, மூட்டு வலி ஆகியவற்றை தடுக்கிறது. மாதவிடாய் இருப்பவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் இதனைச் செய்ய வேண்டாம். 

 

 

மூச்சுப் பயிற்சி:

இந்த மூச்சுப் பயிற்சியை உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கலாம். தினமும் 10 நிமிடங்களாவது இதில் குறிப்பிட்டதுபோல மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் மனது ஒருநிலை அடையும். தேவை இல்லாத தவறான எண்ணங்கள் தோன்றுவதைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்படைவதோடு, நீங்கள் செய்யும் வேலையில் உற்பத்தித் திறனையும் மேம்படுத்துகிறது. மேலும் கோவம், பயம், பதட்டம் அனைத்தையும் குறைத்து மனதை அமைதிப்படுத்த நிச்சயம் இந்த மூச்சுப்பயிற்சி உதவும். மாடிப்படிகட்டுகளில் ஏறினால் மூச்சு வாங்குகிறதா, கண்டிப்பாக இதனை முயற்சி செய்து பாருங்கள். மூச்சுவாங்குவது கண்டிப்பாகக் குறையும்,

 

 

இவைத்தவிர மேலும் பல யோகா வீடியோக்கள் பிரதமரின் ட்விட்டர் அக்கவுண்டில் போடப்பட்டுள்ளது. அவற்றுள் சில வீடியோக்கள் தொடர்ந்து யோக செய்பவர்கள் செய்யும் அளவுக்கு சற்று சிரமமாக உள்ளன. அவற்றுள் முதன் முறையாக யோக செய்பவர்கள் செய்யக்கூடிய வீடியோக்கள் இங்கே...

உடல் எடைக் குறைய சலபாசனம்: 

 

 

பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய புஜங்காசனம்: (கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்கவும்)

 

 

தலைவலி போக்கும் சஷங்காசனம்:

 

 

செரிமானப் பிரச்னையை சரி செய்யும் பவன் முக்தாசனம்:

 

 

முதுகு, கால்களுக்கு வலு சேர்க்கும் வஜ்ராசனம்:

 

 

இடுப்புச் சதையைக் குறைக்க உதவும் வக்ராசனம்:

 

 

*மாதவிடாய் இருப்பவர்கள், கர்ப்பிண்ப் பெண்கள் மேலே குறிப்பிட்டு இருக்கும் எந்த ஒரு ஆசனத்தையும் பயிற்சியாளர்களின்  அறிவுரையைக் கேட்காமல் செய்யவேண்டாம்.

NEXT STORY
யோகாதினம்: உடல் வலுப்பெற, உடல் எடைக் குறைய, தலைவலி நீங்க... மோடி பதிவிடும் யோகா வீடியோக்களைப் பார்த்தீர்களா? Description: பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான யோகாசனத்தைப் பற்றியும் அதன் பயன்களைப் பற்றியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். அவற்றுள் சில முக்கியமான ஆசனங்களைப் பார்க்கலாம்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola