Types Of Palazzo Pants: பலாசோவில்தான் எத்தனை வகை! ஒவ்வொன்றையும் இப்படிதான் அணிய வேண்டுமாம்!

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Mar 22, 2019 | 23:17 IST | Times Now

பலாசோ என்றதும் சட்டென ஸ்ரீப்ரியாதான் நியாபகத்துக்கு வருகிறார்... பலாசோவிலும் பல வகைகள் கடைகளில் கிடைக்கிறது. அவற்றில் ஃபேமஸான சில வகைகளும் அதனுடன் என்ன காம்போவை அணியலாம் என்றும் பார்ப்போம்..

Types Of Palazzo Pants
Types Of Palazzo Pants  |  Photo Credit: Instagram

ஃபேஷன் பற்றிய உலகப் பழமொழி ஒன்று உண்டு.. " Fashion is a rotation" . இது எல்லா காலத்திலும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் பழமொழி... சரோஜாதேவி போடாத லெக்கிங்ஸா, அஞ்சலிதேவி போடாத கேதரிங்பேன்டா.. அனார்கலி முதல் கௌன்வரை ஏற்கனவே வந்த ஃபேஷன்தானே? அந்த வகையில் இப்போதிய ட்ரெண்ட்.. பலாசோ! பலாசோ என்றதும் சட்டென ஸ்ரீப்ரியாதான் நியாபகத்துக்கு வருகிறார்... பலாசோவிலும் பல வகைகள் கடைகளில் கிடைக்கிறது. அவற்றில் ஃபேமஸான சில வகைகள்..

ஃப்லேர்டு பலாசோ:

பார்க்க ஸ்கர்ட் போலவேதான் இருக்கும் இந்த பலாசோ பலரின் ஃபேவரைட். நானும் ரௌடிதான் படத்தில் நீயும்நானும் பாடலில் நயந்தாரா போட்டிருக்கும் அந்த ஃப்லேர்டு பலாசோ மிகவும் ஃபேமஸ்... பார்க்க ஸ்கர்ட் போல இருந்தாலும் பேண்ட் என்பதால் மிகவும் கம்ஃபர்ட்டாக இருப்பது இதன் ப்ளஸ்... இதில் பார்டர்டு பலாசோ, ஸ்ட்ரெய்ட்கட் ஃப்லேர்டு பலாசோ, பூட்கட் ஃப்லேர்டு பலாசோ என பல விதங்களிக் வருகிறது.

இதற்கு சைட் ஓபன் இருக்கும் குர்தி, க்ராப்டாப் நல்ல சாய்ஸ். அனார்கலி, லாங்க் குர்தியை தவிர்த்தல் நலம்

க்லாட்ஸ்:

இதுவும் பலாசோ வகைதான். டீன்களின் கேஷுவல் ட்ரெஸில் இதுதான் டாப் ட்ரெண்ட். ஃப்லேர்டு பலாசோ கனுக்கால்வரை இருப்பதை க்லாட்ஸ் என்கிறார்கள். இதற்கு ட்யூனிக் டாப் நல்ல சாய்ஸ். லாங்க் டாப்ஸ் செட்டாகாது.

தோத்தி பலாசோ:

நம்ம ஊரில் வெளிநாட்டவர் வந்தால் பட்டியாலா போல அணிந்திருப்பார்களே.. அதைத்தான் தோத்தி பலாசோ என்கிறார்கள். இந்தவகை இருபாலரும் அணிவது இதன் ஸ்பெஷல். அனேகமாக இந்தியாவில் மட்டும்தான் இந்தவகை விற்பனையாகும்போல... நம்ம விஜய்கூட நண்பன் - ஒல்லிபெல்லி பாடலில் அணிந்திருப்பார்... பெரும்பாலும் டேன்ஸ், ஏரோபிக்ஸ், யோகா செய்பவர்கள் இதனை பயன்படுத்துகிறார்கள். இதற்கு ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் நல்ல சாய்ஸ், ஸ்பெகட்டி அணிந்தால் இன்னும் நல்ல காம்போவாக இருக்கும்.

பெல்ட் பலாசோ:

பெயர்தான் பெல்ட் பலாசோ, டெய்லர் அக்கா சுடிதார் தைக்கயில் அதே துணியில் ஹேர்பேண்டு தைத்துக் கொடுப்பாரே அப்படி பலாசோ துணியிலேயே பெல்ட் போன்று பட்டையாக நாடா சேர்த்தால் பெல்ட் பலாசோ... பெரும்பாலும் பாலீஸ்டர் துணியில் வரும் இந்த பலாசோவை இன்பண்ணி அணிந்து சென்றாலும் நல்ல லுக் தரும்.. (பின்னே பெல்ட் தெரியவேண்டாமா)

லேயர்டு பலாசோ:

பெயரிலேயே காரணம் புரிந்திருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட துணிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பலாசோ இதில் டபுள் லேயர்டு கூட வருகிறது... இதற்கு க்ராப் டாப் மற்றும் ஷார்ட் குர்தி மேட்சிங்காங்க இருக்கும். இது அனைவருக்கும் ஏற்ற ஒரு மாடல்

டயர்டு/பாலிவுட் பலாசோ:

பிக்பாஸ் பார்ப்பவர்களுக்கு இந்த மாடல் நன்கு தெரிந்திருக்கும். யாஷிகா, ஐஸ்வர்யா, மும்தாஜ்கூட இந்தவகை பலாசோவை அணிந்திருந்தார்கள். மேலே நார்மலாக இருக்கும் கீழே மட்டும், ஃப்ராக்கில் இருப்பதுபோல ஃப்ரில் வைத்து வருகிறது. நார்த் இந்தியாவில் தற்போதைய ட்ரெண்ட் இதுதான்.

அந்த ஃப்ரில் தொடங்குவதற்கு மேல்வரை எந்த டாப் வேண்டுமென்றாலும் போடலாம். யாஷிகா ஸ்லிட்டட் பலாசோவும் சிலமுறை அணிந்திருக்கிறார். நமது சுடிதாரில் சைட்கட் வருவதுபோலவே பலாசோவிலும் சைடில் ஸ்லிட் வருகிறது.

ரஃபுல் பலாசோ:

பேஸ்புக் டைம்லைனின் கண்டிப்பாக இந்த வகை பலாசோக்களை பார்த்திருக்கலாம். நம்ம ஊர் கடைகளில் பார்த்தவரைக்கும் விற்பனைக்கு இல்லை. ஆனால் ஆன்லைனில் கிடைக்கிறது. பார்க்க, லேயர்டு, ப்ரில், பெல்ட் பலாசோக்களின் கலவையாக இருக்கிறது.இதற்கும் ஸ்பெகட்டி டாப் போட்டால் இதன் லுக் மறைக்காமல் இருக்கும்!

 

 

 

 

 

 

 

 

 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...