46 வயதில் இரட்டைக் குழந்தைக்குத் தாயானார் இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளா

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated May 15, 2019 | 12:29 IST | Times Now

அரசியலில் இருந்து விலகி கொடைக்கானலில் குடி பெயர்ந்தவர், தன்னுடம் போராட்டத்தில் உருதுணையாக இருந்த  பிரட்டன் நாட்டைச் சேர்ந்த  தேஸ்மந்த் என்பவரைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.

irom sharmila blessed with twin girls - photos
irom sharmila blessed with twin girls - photos   |  Photo Credit: Twitter

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் இரோம் சர்மிளா. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்தவர். மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தியவர். கடந்த 2016-ஆம் ஆண்டு தனது போராட்டத்தைக் கைவிட்டவர், 2017-இல் நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் முதல்வரை எதிர்த்துப் போட்டியிட்டார். வெறும் 100 வாக்குகளைவிடக் குறைவாகப் பெற்று படுதோல்வி அடைந்ததால், அந்த வருடமே அரசியலில் இருந்து விலகி கொடைக்கானலில் குடி பெயர்ந்தவர், தன்னுடம் போராட்டத்தில் உருதுணையாக இருந்த  பிரட்டன் நாட்டைச் சேர்ந்த தேஸ்மந்த் என்பவரைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.

அவரது திருமணத்தைத் தடுத்து நிறுத்த பல அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும் போலீஸ் பாதுகாப்போடு அவரது திருமணம் 2017-ஆம் ஆண்டு நடைபெற்றது. தற்போது பெங்களூருவில் கணவருடன் வசித்துவரும் இரோம் சர்மிளாவுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினத்தன்று இரட்டைக் குழ்ந்தைகள் பிறந்தன. மல்லேஸ்வரம் க்ளவுட்நைன் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் புகைப்படத்தைம் தற்போது அந்த மருத்துவமனை வெளியிட்டுள்ளது. 

46 வயதாகும் இரோம் சர்மிளா, தனக்குப் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு நிக்ஸ் சாகி, ஆடம் தாரா என்று பெய்ரிடப்போவதாக கூறியிருக்கிறார். பல வருடங்களாக இன்னல்களைச் சந்தித்த இந்த மணிப்பூரின் இரும்பு பெண்மணிக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. 

NEXT STORY
46 வயதில் இரட்டைக் குழந்தைக்குத் தாயானார் இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளா Description: அரசியலில் இருந்து விலகி கொடைக்கானலில் குடி பெயர்ந்தவர், தன்னுடம் போராட்டத்தில் உருதுணையாக இருந்த  பிரட்டன் நாட்டைச் சேர்ந்த  தேஸ்மந்த் என்பவரைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola