நிபா வைரஸ் என்றால் என்ன? பரவுவது எப்படி? சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்!

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Jun 04, 2019 | 16:19 IST | Times Now

கேரளாவில் 21 வயது கல்லூரி மாணவருக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிபா வைரஸ் என்றால் என்ன? பரவுவது எப்படி? சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்.

நிபா வைரஸ் பரவுவது எப்படி? சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்
நிபா வைரஸ் பரவுவது எப்படி? சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்  |  Photo Credit: Thinkstock

கேரளாவில் 21 வயது கல்லூரி மாணவருக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் 1998 ஆம் ஆண்டு முதன்முதலில் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்த நிபா வைரஸ் தொற்று காரணமா கடந்த ஆண்டு மே மாதம் கேரளாவில் 17 பேர் உயிரிழந்தனர். தற்போது கேரளாவில் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 86 பேரிடம் வைரஸ் தொற்று உள்ளதாக என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், நிபா வைரஸ் என்றால் என்ன? அது எவ்வாறு பரவுகிறது, சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்து பார்க்கலாம்.

நிபா வைரஸ் அறிகுறிகள்:

நிபா வைரஸ் தொற்று ஏற்படுபவர்களுக்கு பல்வேறு விதமான பிரச்சனைகள் உருவாகலாம். நிபா வைரஸ் தொற்று ஏற்படுபவர்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீழ்காணம் அறிகுறிகள் தோன்றலாம்.

* காய்ச்சல்
* தலைவலி
* வாந்தி மயக்கம்
*தசை வலி
* தொண்டை வறட்சி

மேலும், தூக்க கலக்கம், மனக்குழப்பம் மற்றும் மற்றும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளும் ஏற்படலாம். சிலருக்கு நிமோனியா மற்றும் கடுமையான மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்டு, 24 மணி முதல் 28 மணி நேரத்திற்குள் கோமாவுக்கு செல்லும் நிலை ஏற்படலாம்.

நிபா வைரஸ் பரவுவது எப்படி:

முதலில், மனிதனுக்கு நிபா வைரஸ் பரவியது பன்றியிலிருந்து தான். நோய் வாய்பட்ட பன்றி மற்றும் சதையிலிருந்து நிபா வைரஸ் பரவுகிறது. எனினும், ஒரு மனிதனிடம் இருந்து மற்றொருவருக்கும் நிபா வைரஸ் பரவுகிறது. வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கும் பரவுகிறது. 2001 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வங்கதேசத்தில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களில் பாதிப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவியதால் ஏற்பட்டதே எனது உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், நோய் தோற்றுக்கு ஆளான  வவ்வால்களிடமிருந்தும் நிபா வைரஸ் பரவுகிறது. இந்தியா மற்றும் வங்கேதசத்தில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களில் பெரும்பாலனவர்களுக்கு வவ்வால்கள் மூலமே பரவியுள்ளது.


சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்:

நிபா வைரஸூசுக்கு இதுவரை சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், ரிபாவிரின் எனப்படும் மருந்து சிகிச்சை அளிக்க சற்று உதவிகரமாக உள்ளது. 

* நோய்வாய்ப்பட்ட பன்றிகளிலிடமிருந்து விலகியிருக்க வேண்டும்

* வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களை தொட நேர்ந்தால், ஸ்பிரிட் மூலம் 20 விநாடிகள் கைகளை கழுவ வேண்டும்.

நிபா வைரஸ் தொற்றை சரிசெய்ய சிகிச்சை இல்லாத நிலையில், போதுமான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதே சிறந்தது.

NEXT STORY