உடலை ’ஸ்லிம்’ ஆக்க இயற்கை காட்டும் 10 வழிகள்

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Nov 07, 2019 | 16:12 IST | Times Now

சீரான உடல் எடை பராமரிப்பதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம். எடை கூடினால் உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படக்கூடும்.

Weight Loss, உடல் எடை குறைப்பு
உடல் எடை குறைப்பு  |  Photo Credit: Getty Images

உடல் எடையை குறைக்க எத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலும் சிலருக்கு அந்த கனவு கைகூடுவதே இல்லை. உடல்நலம் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக இன்று தெருவுக்கு ஒரு ஜிம் இருப்பதை நம்மால் காணமுடிகிறது.

உடல் எடை குறைய உடற்பயிற்சி செய்தால் போதும் என்று இருந்துவிடுவது எந்த பலனையும் தராது. வாழ்க்கை முறையிலும், உணவிலும் உரிய மாறுதல்களை ஏற்படுத்தாமல் உடல் எடையை குறைப்பது சாத்தியமற்றது. இன்றைய நவீன வாழ்க்கை முறையில் நமது உணவுப் பழக்கம் பெரும் மாற்றம் கண்டுள்ளது. உடல் எடை குறையாமல் இருக்க இது ஒரு முக்கிய காரணமாகும்.

மரபியல், பழக்கவழக்கங்கள், வளர்சிதை மாற்றம் (metabolism) மற்றும் உடல் நிறை குறியீட்டெண் (Body Mass Index) ஆகியவை ஒருவரின் உடல் எடையை தீர்மானிக்கிறது. சீரான உடல் எடை பராமரிப்பதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம். எடை கூடினால் உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படக்கூடும். 

உடல் எடையை சீராக பராமரிக்க இவற்றை கடைபிடிக்கவும்:

  • உணவில் கவனம் தேவை
  • போதியளவு தூக்கம்
  • காலை உணவை தவிர்க்காதீர்
  • சுறுசுறுப்பாக இருக்கவும்
  • தவறாது உடற்பயிற்சி செய்யவும்
  • புரதச்சத்து அதிகம் எடுத்துக்கொள்ளவும்

உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும்போது இந்த உணவுகளை தவிர்க்கவும்:

  • குளிர்பானங்கள்
  • குக்கீஸ், கேக்
  • உருளைக்கிழங்கு சிப்ஸ்
  • கொழுப்பு மிகுந்த சிவப்பிறைச்சி
  • மல்டி-கிரெய்ன் பிரெட்
  • மைக்ரோவேவ் பாப்கார்ன்
  • பீட்சா
  • மாம்பழம், வாழைப்பழம், திராட்சை
  • சோயா சாஸ்
  • ஐஸ்கிரீம்
  • சாக்லேட்
  • எண்ணெயில் பொரித்த உணவுகள்
  • தர்ப்பூசணி பழம்
  • மதுபானம்
  • பிரஞ்சு பிரைஸ்

உடல் எடையை குறைக்க இயற்கை தரும் மருந்துகள் இதோ:

  1. நீர்: தண்ணீர் உடலுக்கு நீரூட்டும். தண்ணீர் குடித்தால் பசி குறையும், மெடபாலிசம் அதிகரிக்கும்.
  2. தேங்காய் எண்ணெய்: கொழுப்பை குறைக்கவும், மெடபாலிசம் அதிகரிக்கவும் தேங்காய் எண்ணெய் உதவும். 
  3. கிரான்பெர்ரி ஜூஸ்: நச்சுப்பொருட்களை வெளியேற்றி, கலோரிகளை குறைக்க கிரான்பெர்ரி ஜூஸ் உதவும்.
  4. யோகர்ட், தேன்: புரதச்சத்து அதிகம் உள்ள யோகர்ட், மெடபாலிசம் அதிகரிக்க உதவும்.
  5. கேரட் ஜூஸ்: ஊட்டச் சத்துக்கள் அதிகம் உள்ள கேரட் ஜூஸில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், நார்ச்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்கும் பித்தநீர் சுரக்க கேரட் ஜூஸ் உதவுகிறது.
  6. ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை ஜூஸ்: ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை ஆகிய சிட்ரஸ் பழங்களில் கலோரிகள் குறைவாக உள்ளன. மேலும், இவற்றில் வைட்டமின் C மற்றும் B அதிகம் உள்ளது.
  7. கிரீன் டீ: உடல் எடையை குறைத்து பெடபாலிசம் அதிகரிக்க கிரீன் டீ உதவும்.
  8. ஆப்பிள் சைடர் வினிகர்: ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அளவுகளை குறைக்க ஆப்பிள் சைடர் வினிகர் உதவும்.
  9. புரதச்சத்து மிகுந்த உணவு: உணவில் புரதச்சத்து அதிகம் சேர்த்துக்கொண்டால் மெடபாலிசம் அதிகரிப்பதோடு, தசைகள் வலுவாகி, உடல் எடை குறைய உதவும்.
  10. பாக்கெட் உணவுகள் வேண்டாம்: பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளில் சர்க்கரை, கொழுப்புச்சத்து, உப்பு, கலோரிகள் அதிகம் உள்ளன. நார்ச்சத்து, வைட்டமின், மினரல் சத்துக்கள் குறைவாக உள்ளன.

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட பரிந்துரைகள் அனைத்தும் பொது பயன்பாட்டிற்கானவை. அவை யாவும் மருத்துவ ஆலோசனையாக கருதப்படக் கூடாது. மருத்துவம் சார்ந்த கேள்விகள் அல்லது சந்தேகங்களுக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.

NEXT STORY