நாசி துளைகளில் வீக்கம் காரணமாக ஏற்படும் பிரச்சனை ’சைனஸ்’ எனப்படுகிறது. வைரஸ், பாக்டீரியா அல்லது ஃபங்கஸ் காரணமாக சைனஸ் ஏற்பட வாய்ப்புள்ளது. சாதாராண ஜலதோஷம் 3-5 நாட்கள் நீடிக்கும். ஆனால், சைனஸ் நோய் 12 நாட்களுக்கும் மேல் நீடிக்க வாய்ப்புள்ளது.
கட்டுக்கடங்காத அளவிற்கு நாசியில் பாக்டீரியாக்கள் பெருகுதலால் சைனஸ் ஏற்படுகிறது. ஜலதோஷத்தால் நாசியில் ஏற்படும் வீக்கம் காரணமாக சைனஸ் ஏற்படுகிறது. புகை, மாசு ஆகியவற்றில் இருந்து தற்காத்துக் கொண்டால் சைனஸ் ஏற்படும் வாய்ப்பு குறையும். ஜலதோஷம், வைரஸ் தொற்று மற்றும் மூச்சுப் பாதையில் தொற்று இருப்பவரிடம் விலகி இருத்தல் வேண்டும். சைனஸ் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவு நீர் பருக வேண்டியது அவசியமாகும்.
சைனஸ் நோயில் இரண்டு வகைகள் உண்டு. அக்யூட் சைனஸ் எனப்படுவது 3 வாரங்களுக்கு மிகாமல் நீடிக்கும். ஜலதோஷம், வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும். ஆனால், க்ரோனிக் சைனஸ் 12 வாரங்களுக்கு மேல் நீடிக்க வாய்ப்புள்ளது. ஒரு முறை வந்து செல்வது போல் அல்லாது, விட்டு விட்டு தாக்க வாய்ப்புள்ளது. க்ரோனிக் சைனஸ் உள்ளவர்களுக்கு தொண்டை வலி ஏற்படவும் வாய்ப்புள்ளது.
பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட பரிந்துரைகள் அனைத்தும் பொது பயன்பாட்டிற்கானவை. அவை யாவும் மருத்துவ ஆலோசனையாக கருதப்படக் கூடாது. மருத்துவம் சார்ந்த கேள்விகள் அல்லது சந்தேகங்களுக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.