புது டெல்லி: ரத்த அழுத்தம் ஆரோக்கிய அளவைக் கடந்து அதிகரிக்கும் போது உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் போது சில நேரங்களில் அறிகுறிகள் தெரிந்தாலும் பல நேரங்களில் அறிகுறிகள் ஏதும் தென்படுவதில்லை.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவில்லை என்றால் ரத்த குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் இருதய நோய்கள் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. தலைவலி, மயக்கம், சீரற்ற இதயத்துடிப்பு, நெஞ்சுவலி மற்றும் உயர் ரத்தக் கொழுப்பு உள்ளிட்ட உபாதைகளும் வரக்கூடும்.
உயர் ரத்த அழுத்தம் எதனால் ஏற்படுகிறது என்பதற்கு சரியான காரணங்கள் தெரியவில்லை என்றாலும் உணவில் அதிக உப்பு எடுத்துக்கொள்வது, அதிகமாக மது அருந்துதல், மன உளைச்சல், மரபியல், தைராய்டு ஆகியவை உயர் ரத்த அழுத்தம் ஏற்பட காரணிகளாக அமையலாம்.
ரத்த குழாய்கள் சேதமடையும்
அரோக்கியமான ரத்த குழாய்கள் நெளிந்து சுருங்கும் தன்மை கொண்டது. உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் ரத்த குழாயின் உட்புறத்தில் உள்ள உயிரணுக்கள் சேதமடையும்.
இருதய பாதிப்புகள்
உடல் முழுவதற்கும் ரத்தத்தை அனுப்பி வைப்பது இதயம். உயர் ரத்த அழுத்தத்தால் இதயத்தின் சுமை அதிகரிக்கிறது. இதனால் இருதய தசைகள் வலுவிழக்கின்றன.
மூளை பாதிப்புகள்
உயர் ரத்த அழுத்தத்தால் மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் ரத்தம் கட்டி அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
சிறுநீரக பாதிப்புகள்
உயர் ரத்த அழுத்தம் உடையவர்களுக்கு ரத்த குழாய்களில் அதிக ரத்தம் செல்வதால் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்கள் பாதிக்கப்படும்.
கண்களுக்கும் பாதிப்பு
கண்களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்த கசிவு ஏற்படலாம் அல்லது பார்வையிழக்கவும் நேரலாம்.
பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட பரிந்துரைகள் அனைத்தும் பொது பயன்பாட்டிற்கானவை. அவை யாவும் மருத்துவ ஆலோசனையாக கருதக் கூடாது. உணவு பழக்கங்களில் மாற்றங்கள் செய்யும் முன் உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைகளைப் பெறுங்கள்.