தங்கம் விலை சவரன் ரூ 28,000த்தை தாண்டியது! மேலும் உயருமாம்

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Aug 07, 2019 | 11:33 IST | Times Now

தங்கம் ஒரு சவரன் 28, 352வுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது புதிய உச்சமாகும்.

Gold Rate today
Gold Rate today  |  Photo Credit: Getty Images

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு இன்று ஒரு சவரன் 28, 352வுக்கு விற்கப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை 400 ரூபாய்க்கும் மேல் அதிகரித்து ஒரு சவரன் 27, 680 ரூபாய் விற்பனை ஆன நிலையில் தற்போது மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

மேலும் இந்த தங்கத்தின் விலை இன்னும் உயரக்கூடும் என்று விற்பனையாளர்கள் கருதுகிறார்கள். நேற்றைய விட ஒரு கிராம் தங்கம் ரூ 71 அதிகமாகவும் சவரனுக்கு 568 ரூபாய் அதிகரித்தும் உள்ளது. மேலும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இன்று வரை விடுமுறை நாட்களைத் தவிர்த்து பார்த்தோமானால் கடந்த 6 நாட்களில் ஒரு கிராமுக்கு 234 ரூபாயும், ஒரு சவரனுக்கு 1872 ரூபாயும் மொத்தமாக அதிகரித்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் ஒரு சவரன் 30,000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். 

அமெரிக்க - சீனாவுக்கு இடையேயான பொருளாதார போர் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியாக இருப்பதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை ஆடி மாதம் பெரும்பாலானவர்கள் திருமணம் செய்வதில்லை. இதனால் இந்த மாதத்தில் பொதுவாக தங்கத்தின் விலை குறைந்து இருக்கும். அப்போது இனி வரும் திருமணங்களுக்கு தங்கம் வாங்குவர். அவர்களுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். வெள்ளி ஒரு கிராம் இன்று 46.80 வுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

NEXT STORY