எல்லாமே செட் ஆவும், எதுவுமே செட் ஆவாது, எந்த முகத்துக்கு எந்த இயரிங்ஸ் பெஸ்ட்?

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Mar 26, 2019 | 16:11 IST | Times Now

ஒவ்வொரு முக அமைப்புக்கும் ஏற்றவாரு காதணிகள் அணிந்தே ஆகவேண்டும் என்று இல்லை, அப்படி அணிந்தால் நன்றாக இருக்கும் !

how to wear best earrings for your face shape
முக அமைப்பு  |  Photo Credit: Getty Images

உடைகளைத் தேர்ந்தெடுப்பதைவிட அதற்கு மேட்சிங்கான காதணிகள், நெக்பீஸ் அமைவதுதான் பெரிய விஷயமே. உடைகளுக்கு ஏற்ற காதணிகளை வாங்குவோம், ஆனால் அது உங்கள் முகத்துக்கு ஏற்றதா என்று பார்த்து வாங்கியிருக்கிறீர்களா? எல்லாருடைய முக அமைப்பும் ஒன்றுபோல் இருப்பதில்லை. வட்டம், நீள்வட்டம், ஓவல், சதுரம், ஹார்ட்டின் என விதவிதமான பெயர்களில் அவற்றை வகைப்படுத்துகிறோம். அப்படி ஒவ்வொரு முக அமைப்புக்கும் ஏற்றவாரு காதணிகள் அணிந்தே ஆகவேண்டும் என்று இல்லை, அப்படி அணிந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் சொல்கிறோம்...

நீள்வட்ட முகம்: காத்ரீனா கைஃப்

நெற்றிப்பகுதி பெரியதாக இருக்கும். முக அகலத்தை விட நீளம் ஜாஸ்தியாக இருக்கும். தாடையும் நெற்றிப் பகுதியும் குறுகி சரிசமமான அளவில் இருக்கும்.

பெரிய வளையங்கள், ஸ்டட்டுகள், ஷார்ட் டேங்கிள்ஸ் உங்களுக்கு நன்றாக இருக்கும். மிகவும் நீளமாக இல்லாமல், குறைந்த நீளம் அதிக அகலம் கொண்ட காதணிகள் உங்களது முகத்தை அகலமாக்கும், அழகாக்கும். மேலும் தாடையைத் தாண்டி காதணிகள் அணியவேண்டாம். அது இன்னும் உங்களது முகத்தை நீளமாக்கிவிடும்

சதுர முகம்:  கரீனா கபூர்

நீள் வட்டம் போலவேதான் இருக்கும். ஆனால் நெற்றிப்பகுதியும் தாடையும் அகலமாக இருக்கும். நெற்றிப் பகுதியும் கன்னமும் ஒரே அகலத்தில் இருக்கும்

சதுர முகம் கொண்டவர்கள் பார்ப்பதற்கு ரஃப் அண்ட் டஃபாகத் தெரிய வாய்ப்பு அதிகம். அதனால் கட்டம், முக்கோணம் போன்று ஷேப்ஸ் கொண்ட காதணிகளை அணியவேண்டாம். எப்போதும் தாடையில் பெரியதாக இருக்குமாறு அணியவேண்டாம். மேலே பெரிய ஸ்டட்ஸ், கீலே நீளாமான டேங்கிள்ஸ் நல்ல சாய்ஸ். எப்போதும் வட்டம், ஓவல், அல்லது செயின் வடிவிலேயே நீங்கள் அணிவது உங்களை கொஞ்சம் சாஃப்டாகக் காட்ட உதவும்.

earrings

ஓவல் முகம்: அலியா பட்

நீள் வட்ட முகம், நெற்றியும் தாடையும் குறுகி இருக்கும் அல்லவா, ஓவல் முகம் நெற்றியைவிட தாடைப்பகுதி மிகவும் குறுகி இருக்கும். கிட்டத்தட்ட வட்டமுகம் போலவேதான் இருக்கும். கிட்டத்தட்ட எல்லா வகை காதணிகளும் பொருத்தமாக இருக்கக்கூடிய ஒரே முக அமைப்பு கொண்டவர்கள் இவர்கள். லாங்க் ட்ராப், ஸ்டட்ஸ், க்ளஸ்டர், ட்ரையாங்கிள் என எல்லாமே இவர்களுக்கு சூட் ஆகும் அதிர்ஷசாலி இவர்கள்!

வட்ட முகம்: ஐஷ்வர்யா ராய்

வட்ட முகத்தைப் பற்றி சொல்ல வேண்டுமா? கேலண்டரில் இருக்கும் மகாலக்‌ஷி முகம்தான். நெற்றி, கன்னம், தாடை சரியான விகிதத்தில் வட்ட வடிவத்தோடு இருக்கும். ஆனால் என்ன ப்ரயோஜனம், வட்ட வடிவ காதணிகளை அணியாமல் இருப்பது இவர்களுக்கு நல்லது. இது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். ஏனென்றால் பெரும்பாலான வட்ட வடிவம் உடையவர்கள் ரௌண்டாகதான் காதணிகளை அணிவார்கள். ஆனால் அது இன்னும் உங்களது முகத்தை பெரியதாகக் காட்டும். நீலமான டேங்கிள்ஸ், டியர்ட்ராப் சந்த்பாலி, செயின் இயரிங்க்ஸ் போன்றவை பயன்படுத்துங்கள்

ஹார்ட்டிங் முகம்: தீபிகா படுகோனே

இது மேலே சதுர முகம் போலவும், கீழே ஓவல் போன்று கூம்பாகவும் இருக்கும் வட்ட முக அமைப்பு. தாடை மிகவும் ஒடுங்கி இருப்பதால், பெரிய பெரிய காதணிகள் இவர்களுக்கு சூட் ஆகும். ஹூக் ஜிமிக்கி, சந்த்பாலி, ஃபெதர், டசல் , டியர் ட்ராப் நல்ல சாய்ஸ்.

 

NEXT STORY
எல்லாமே செட் ஆவும், எதுவுமே செட் ஆவாது, எந்த முகத்துக்கு எந்த இயரிங்ஸ் பெஸ்ட்? Description: ஒவ்வொரு முக அமைப்புக்கும் ஏற்றவாரு காதணிகள் அணிந்தே ஆகவேண்டும் என்று இல்லை, அப்படி அணிந்தால் நன்றாக இருக்கும் !
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola