Thailand: பிளாஸ்டிக்குக்கு மாற்றாக ‘வாழை இலை’ பேக்கிங் - அசத்தும் தாய்லாந்து!

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Mar 25, 2019 | 09:35 IST | Times Now

Thailand: சிறு வணிகர்கள் முதல் பெரும் கடைகள் வரையில் அனைத்து விதமான காய்கறிகளும் வாழை இலை மூலமாகவே பேக் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதன்மூலம் வாழை விவசாயத்தை ஊக்குவிக்கின்றனர் தாய்லாந்து வணிகர்கள்.

thailand news, தாய்லாந்து செய்திகள்
வாழை இலையில் காய்கறிகள் - தாய்லாந்து  |  Photo Credit: Twitter

சென்னை: தென்னிந்தியாவில் பாரம்பரியமாக உணவு பரிமாறப் பயன்படுத்தப்படும் வாழை இலைக்கு ஒரு சிறந்த கவுரவத்தை அளித்துள்ளனர் தாய்லாந்து நாட்டினர்.

நாம் வாழை இலைகளில் குணநலன்களை மறந்து பிளாஸ்டிக்கின் பின் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களோ மீதமாகும் வாழை இலைகளைக் கொண்டு பச்சைக் காய்கறிகளை பாதுகாத்து வருகின்றனர். 

தாய்லாந்து நாட்டின் வணிக வளாகங்களிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் காய்கறிகள் வாடாமல் பச்சைப் பசேலென்று இருக்கும் வகையில் வாழை இலைகளைக் கொண்டு சுற்றி பேக் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. 

சிறு வணிகர்கள் முதல் பெரும் கடைகள் வரையில் அனைத்து விதமான காய்கறிகளும் வாழை இலை மூலமாகவே பேக் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதன்மூலம் வாழை விவசாயத்தை ஊக்குவிக்கின்றனர் தாய்லாந்து வணிகர்கள்.

முன்னொரு காலத்தில் வாழை இலையின் பயன்பாடு நம்மிடையே சிறப்பாக இருந்து வந்தது. மருத்துவ பயன்பாடுகள் கொண்ட சத்துகள் மிகுந்த வாழை இலையில் தொடர்ச்சியாக உணவு உட்கொண்டு வந்தால் தோலின் பளபளப்பு கூடும். உடலின் ஆரோக்கியமும் மேம்படும். செரிமானக் கோளாறுகள், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது வாழை இலை உணவு.

வாழை இலையில் உள்ள பசுந்தன்மையான குளோரோஃபில் உணவை எளிதில் செரிக்க வைக்கிறது. வயிற்றுப் புண்ணை ஆற்றுகிறது. மேலும், நல்ல பசியையும் தூண்டும் சக்தியுடையது வாழை இலை. இவ்வளவு மகத்துவம் கொண்ட வாழை இலையை நாமும் தாய்லாந்து நாட்டினர் போல பிளாஸ்டிக்கு மாற்றாக உபயோகித்தால் வீடும், நாடும் வளம்பெறும்!

NEXT STORY
Thailand: பிளாஸ்டிக்குக்கு மாற்றாக ‘வாழை இலை’ பேக்கிங் - அசத்தும் தாய்லாந்து! Description: Thailand: சிறு வணிகர்கள் முதல் பெரும் கடைகள் வரையில் அனைத்து விதமான காய்கறிகளும் வாழை இலை மூலமாகவே பேக் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதன்மூலம் வாழை விவசாயத்தை ஊக்குவிக்கின்றனர் தாய்லாந்து வணிகர்கள்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola