கோடைகால வெப்பத்தை தணிக்க பருகுங்கள் மல்லி குடிநீர்: எளிய வீட்டு வைத்தியம்!

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Apr 23, 2019 | 17:45 IST | Times Now

கோடை காலத்தில் ஏற்படும் நீர் வற்றிப்போதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு மல்லி குடிநீர் சிறந்த தீர்வாக கருதப்படுகிறது

உடல் சூட்டைத் தணிக்க பருகுங்கள் மல்லி குடிநீர்
உடல் சூட்டைத் தணிக்க பருகுங்கள் மல்லி குடிநீர்  |  Photo Credit: Thinkstock

கோடை கால வெப்பம் நாடுமுழுவதும் முக்கிய நகரங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், வெப்பத்தை தாங்க முடியாமல் தவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு, 1901 ஆம் ஆண்டுக்குப்பின் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்  ஆண்டுகளில் 6 வது இடத்தை பிடிக்கும் என இந்திய வானிலை மையம் இம்மாத தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வெப்ப காலத்தில் ஏற்படும் பாதிப்புகளான சன் ஸ்டார்க்ஸ், வெப்பத்தால் ஏற்படும் தசைபிடிப்பு, நீர் வற்றிப்போதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஆரோக்கியமான மனிதனுக்குக்கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனைகளை சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன்மூலம் தவிர்க்க முடியும். 

குறிப்பாக வெப்பத்தால் ஏற்படும் சன் ஸ்டோர்க்ஸ் எனப்படும் நிலையை கோடை கால மாதங்களில் தவிர்க்க இயலும். கடும் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே, வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முறையான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.  40 டிகிரி செல்சியஸ் அளவிற்கு மேலான வெயிலில் அலையும்போது உடலின் வெப்பமும் பெருமளவு அதிகரிக்கிறது. 

இதுபோன்ற அளவுக்கு அதிகமான வெப்பத்திற்கு மனித உடல் உள்ளாகும் போது, குழப்பம், தலைவலி, அதிக உடல் சூடு, குமட்டல், வாந்தி, அதிக அளவு மூச்சுவிடுதல், இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்ற பல்வேறு அறிகுறிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வெப்பத்தை தணிக்கும் வழிமுறைகள்;

1) கடும் வெப்பக்காலத்தில் அதிக அளவிலான உடல் உழைப்பை தவிர்ப்பதன்மூலம், நமது உடலில் நீர் வற்றிப்போகும் நிலையை தவிர்க்க முடியும்.

2) உடல் சூட்டை தணிக்க வீட்டில் உள்ள சில எளிய இயற்கை மருத்துவ முறைகளை கடைபிடிக்கலாம். குறிப்பாக மல்லி இலை மற்றும் புதினா இலை போன்றவை அதிக அளவு உடல் சூடாவதை தடுக்கும் வல்லமை கொண்டதாக கருதப்படுபவை. 

3) எனவே மல்லி குடிநீரைத் தயாரித்து பருகுவதன்மூலம் உடல் சூட்டை தணிக்க முடியும். மல்லி இலை மற்றும் புதினா இலை சாற்றை எடுத்து, சிறிது இனிப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பானமாக குடித்தால், உடல் சூடு தனியும்.

மல்லி குடிநீர் தயாரிப்பது எப்படி;

மல்லி குடிநீர் தயாரிக்க தேவையான பொருட்கள்....

ஒரு கைப்படி அளவு மல்லி இலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்

சிறிதளவு சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும்

மல்லி இலையை நன்றாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்

அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்

பின்னர் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பிரட்ஜில் வைத்து பருகலாம்

கோடை காலத்தில் நாள்தோறும் ஒரு கிளாஸ் மல்லி குடிநீர் தொடர்ந்து குடித்து வந்தால், வெயிலால் ஏற்படும் குமட்டல், வாந்தி போன்ற பல்வேறு பிரச்சனைகளை தவிர்க்க முடியும் எனக் கூறப்படுகிறது. 
 

NEXT STORY
கோடைகால வெப்பத்தை தணிக்க பருகுங்கள் மல்லி குடிநீர்: எளிய வீட்டு வைத்தியம்! Description: கோடை காலத்தில் ஏற்படும் நீர் வற்றிப்போதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு மல்லி குடிநீர் சிறந்த தீர்வாக கருதப்படுகிறது
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola