உங்களுக்கு சியா விதைகளுக்கும் சப்ஜா விதைகளுக்கும் வித்தியாசம் தெரியுமா?

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Apr 23, 2019 | 12:03 IST | விபீஷிகா

கடைகளில் கூட சியா விதைகள் கேட்டால் சப்ஜா விதைகளைத் தருகிறார்கள். இரண்டுமே உடலுக்கு மிகவும் நல்லது. இதனை டயட்டில் இருப்பவர்கள் சூப்பர் ஃபுட்ஸ் என்றுதான் வர்ணிப்பார்கள். ஆனால் இரண்டும் ஒன்றல்ல...

difference between sabja/basil seeds and chia seeds
difference between sabja/basil seeds and chia seeds  |  Photo Credit: Getty Images

சியா விதைகளும், சப்ஜா விதைகளும் ஒன்று என்றே பலர் நினைக்கிறார்கள். கடைகளில் கூட சியா விதைகள் கேட்டால் சப்ஜா விதைகளைத் தருகிறார்கள். இரண்டுமே உடலுக்கு மிகவும் நல்லது. இதனை டயட்டில் இருப்பவர்கள் சூப்பர் ஃபுட்ஸ் என்றுதான் வர்ணிப்பார்கள். ஆனால் இரண்டும் ஒன்றல்ல...

வித்தியாசம் அறிவோம்:

திருநீற்றுப் பச்சிலையின் விதைகள்தான் சப்ஜா விதைகள். ஆங்கிலத்தின் பேசில் சீட்ஸ் என்று கூறுவார்கள். சியா விதைகள் மெக்சிக்கோவைப் பூர்விகமாகக் கொண்டது. சியா விதைகள் சப்ஜா விதைகளவிட சிறியதாக இருக்கும். சப்ஜா விதைகள் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கும். சியா விதைகள் வெள்ளை, கருப்பு, சாம்பல் மூன்று நிற விதைகளும் கலந்து இருக்கும். பார்ப்பதற்கு எள் போன்று இருக்கும் ஆனால் அளவில் சிறியது. இரண்டையும் தண்ணீரில் ஊறவைத்தால், சியா விதைகளைவிட சப்ஜா விதைகள் அளவில் பெரிதாகும். ஃபளூடா, நன்னாரி சர்பத்தில் எல்லாம் நான் உபயோகிப்பது சப்ஜா விதைகளே.

சியா, சப்ஜா

சப்ஜா விதைகளை தண்ணீர்ல் ஊறவைத்துதான் பயன்படுத்த வேண்டும். ஆனால் சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்தும் குடிக்கலாம், அப்படியேவும்  சாப்பிடலாம். சப்பாத்தி செய்யும்போது அவற்றை வறுத்துப் பொடியாக்கி சேர்ந்து சுடலாம். உங்களது டயட் மீல் எதில் வேண்டுமானாலும் முழுமையாகவோ, அரைத்தோ பயன்படுத்தலாம். அவை தண்ணீரில் விரிவடையும் என்பதால் சாப்பிட்டவுடன் வயிறு திம்மென்று ஆகிவிடும். பசியெடுக்காது. அதனாலேயே விளையாட்டு வீரர்களுக்கு இது ஒரு சிறப்பான உணவாக இருக்கிறது.

இயல்பு:

சப்ஜா விதைகள் உடல் குளிர்ச்சிக்கு உதவுபவை. சியா விதைகள் உடலுக்கு வலிமை சேர்ப்பவை. உணவின் ரிச்நெஸ்ஸுக்கு சப்ஜா, உணவில் வலிமைக்கு சியா. இரண்டும் அதிக சத்துக்களை வழங்கும் குறைந்த கலோரி கொண்ட உணவுகள். அதனால்தான் டயட் மேற்கொள்பவர்களுக்கு இவை விருப்பமான உணவாக இருக்கிறது.

பயன்கள்:

இரண்டு விதைகளுமே தண்ணீரில் ஊறினால் விரிவடையும் தன்மை கொண்டதனால் உடல் எடைக் குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற உணவு. சியா விதைகள் அதிக புரதச்சத்து, நார்சத்து, ஒமேகா-3 கொண்டவை. இதனால் செரிமானப் பிரச்னைகளை சரிசெய்கிறது. உடலுக்கு உடனடியாக எனர்ஜி தரவல்லது. உடலில் சர்க்கரையின் அளவை சீராக்க உதவுகிறது. சப்ஜா விதைகள் உடலை குளிர்ச்சியாக்கும். இரும்புசத்து கொண்டது. ஸ்ட்ரெஸ் ஃப்ரீ உணவு என இதைச் சொல்லலாம். உடல்சூட்டால் ஏற்படும் கடுகடுப்பை நீக்கும். உடலில் அதிக சூடு இருப்பவர்கள், தினமும் குடிக்கும் தண்ணீரில் சப்ஜா விதைகளை போட்டுக் குடிக்கலாம். மேலும் உடலை டீடாக்ஸ் செய்து ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது.


 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...