Types of Kurtis: டயில் கட், ஸ்ரெயில் கட், அங்க்ரஹா.. விதவிதமான குர்திக்களின் பெயர்களை அறிவோம்...!

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Mar 25, 2019 | 18:25 IST | Times Now

இங்கே கொடுத்திருக்கும் வகைவகையான குர்திக்களை நீங்கள் வாங்கி உடுத்திருயிருப்பீர்கள். ஆனால் அதன் பெயர்தான் சரியாக தெரிந்திருக்காது. இனி தெரிந்துகொள்ளுங்கள்,

types of kurti
குர்தி கடை  |  Photo Credit: Getty Images

 

Trail cut kurti : குர்தியைவிட பக்கவாட்டில் நீளமாக இருப்பது ட்ரைல் கட். இதுவே சைட் ஓபன் இல்லாமல் இருந்தால் சி கட். மற்றும் ஃப்ரில்லுடன் இருந்தால் ஹை-லோ குர்தி. ஒரே மாதிரி கட் இல்லாமல் கன்னாபின்னாவென்று இருந்தால் அசிம்மிட்ரிக் குர்தி.

Jacket Style Kurti: இந்த வகை டாப்ஸ்கள் இரண்டு லேயராக இருக்கும். உள்ளே ப்லைன் குர்தி, மேலெ கிராண்டான கோட். இரண்டும் தைத்தோ அல்லது தனித்தனியாகவோ இருக்கும். இவை பெரும்பாலும் சைட் கட் இல்லாமல் அம்ப்ரெல்லா மாடலில் வரும். இந்த வகை குர்தியை நாமே தயார் செய்யலாம். அதற்கு, சைட் ஓபன் இல்லாமல் ஸ்லீவ்லெஸ் ப்லைன் குர்தாவுக்கு காண்ட்ராஸ்டாகவோ, அல்லது அதே கலர் காம்பினேஷனில் உள்ள டிசைனர் 3/4 -த் குர்தாவை அணிந்தால் நல்ல லுக் கொடுக்கும். அல்லது அதையே உல்டாவாக, 3/4 -த் குர்தாவுக்கு ஸ்லீவ்லெஸ் கோட்டும் போடலாம். அதற்கு ஆங்கிள் லெந்த் பேண்ட் அல்லது லெக்கிங்ஸ் அணியலாம்

Angrakha kurti : ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த் அணிந்திருப்பாரே அதுதான் அங்க்ரஹா குர்தி. வலது பக்கக் கழுத்தில் இருந்து பார்டர் இடது பக்கத்துக்கு க்ராஸ்ஸாக சென்று கீழ் வரையோ அல்லது மார்புவரையோ இருக்கும். இதற்கு காட்டன் துணிதான் நல்ல சாய்ஸ். ராஜா காலத்து ட்ரஸ் போல இந்த குர்தி ஃப்ளேர் நிறைந்தும் அல்லது நார்மல் ஸ்ரெய்ட்கட், சைட் ஓபன் வைத்தும் என பல மாடல்களில் வரும். இந்த அனக்ரஹா போன்று கீழே இருந்தால் டூலிப் கட் குர்தா.

Tail cut kurti : முன் பக்கத்தில் ஷார்ட்டாவும் பின் பக்கதில் நீளமாவும் இருக்கும். மிகவும் உயரமான பெண்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் இது. காலேஜ் பெண்களின் டாப் லிஸ்டில் இருக்கும் இந்த டாப்ஸ் ஷிஃபான் துணியில் பெரும்பாலும் வரும்.

Anarkali Kurti : மேலே உடலோடு ஒட்டியும் கீழே ப்ளேராக இருப்பது அனார்கலி. அனார்கலி அணிந்திருந்த உடையின் வடிவமைப்பு என்பதல் இந்த பெயர். இதில் கீழே பல அடுக்குகள் இருந்தால் டயர்டு அனார்கலி.

Slit  Kurti: குர்தியின் நடுவில் கட் வருவது ப்ரண்ட் ஸ்லிட் எனப்படும். நடுவே இல்லாமல் க்ராஸாக இருந்தால் சைடு ஸ்லிட். இரண்டுக்குமே பெரும்பாலும் சைட் ஓபர் வராது. சைடு ஸ்லிட்டும் சைடு ஓபனும் ஒன்றல்ல.

 

 

 

 

 

 

 

 

 

 

NEXT STORY
Types of Kurtis: டயில் கட், ஸ்ரெயில் கட், அங்க்ரஹா.. விதவிதமான குர்திக்களின் பெயர்களை அறிவோம்...! Description: இங்கே கொடுத்திருக்கும் வகைவகையான குர்திக்களை நீங்கள் வாங்கி உடுத்திருயிருப்பீர்கள். ஆனால் அதன் பெயர்தான் சரியாக தெரிந்திருக்காது. இனி தெரிந்துகொள்ளுங்கள்,
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola