கொலம்பியா: சிவப்பு..பச்சை...நீலம் - வானவில்லாக வழிந்தோடும் கேனோ ஆறு!

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Apr 01, 2019 | 13:34 IST | Times Now

கொலம்பியா நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்று இந்த ’கேனோ கிறிஸ்டெல்ஸ்’ (Cano cristales) என்னும் வர்ணஜால ஆறு.

columbia, கொலம்பியா
கேனோ கிறிஸ்டெல்ஸ் ஆறு  |  Photo Credit: Twitter

சென்னை: சலசலவென நீர் நிறைந்து ஓடும் ஆறு எப்படி இருக்கும்? பாறை கற்களின் மீது தெளிந்த நீரோடையாகவும், கூழாங்கற்கள், மணல் நிறைந்த அடிப்பாகம் கொண்டதாகவும் இருக்கலாம். தண்ணீரின் நிறமற்ற தன்மையே நதி, ஆற்றின் தன்மையை தீர்மானிக்கும். 

ஆனால், இந்த ஆறோ வானவில் வண்ணங்களில் பளீரென்று கலர்கலர் வர்ணஜாலம் காட்டுகிறது. எங்கிருக்கிறது இந்த ரெயின்போ ஆறு? 

கொலம்பியா நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்று இந்த ’கேனோ கிறிஸ்டெல்ஸ்’ (Cano cristales) என்னும் வர்ணஜால ஆறு.

உள்ளூர்வாசிகள் இதனை ‘திரவ வானவில்’ என்றும் ஐந்து வண்ண ஆறு என்றும் செல்லமாக அழைக்கின்றனர். உலகின் அழகான ஆறுகளில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது இந்த கேனோ. 

ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் இந்த ஆறு வெவ்வேறு வண்ணங்களில் பளீரிடுகிறது. சிவப்பு, இளஞ்சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் மற்றும் கறுப்பு என வகைவகையான நிறங்களில் தோற்றமளிக்கிறது இந்த ஆற்றுப்படுகை.

ஆற்றில் ஓடும் நீர் சுத்தமான தெள்ளத்தெளிவான தண்ணீர் என்றாலும், இந்த ஆற்றுப்படுகையில் வளரும் மெகர்னியா க்ளாவிக்ரா (Macarenia clavigera) எனப்படும் பாசி வகையைச் சேர்ந்த தாவரம்தான் இந்த வண்ண மாறுபாடுகளுக்குக் காரணம். 

நீரின் ஓட்டம் மற்றும் வெளிச்சத்திற்கு ஏற்றவாறு இந்த தாவரம் வெவ்வேறு வண்ணங்களைப் பிரதிபலிக்கிறது. ஒருகாலத்தில் கொரில்லா குரங்குகள் அதிகளவில் வசித்துவந்த வாழ்விடமாக இந்த இடம் இருந்து வந்துள்ளது. அதனால், சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.ஆனால், தற்காலத்தில் சுற்றுலாப்பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் சுற்றுலாத்தலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது இந்த கேனோ ஆற்றுப்பிரதேசம். 

சில இடங்களில் வட்டவடிவ பாறைக் குழிகளில் ஆற்றுநீர் வடிந்து, நிரம்பிச் செல்வது கண்கொள்ளாக்காட்சியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹாலிடேவில் பார்த்து ரசிக்க கலர்புல்லான ஆறு இது!


 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...