உடலை சோர்வாக்கும் இரத்த சோகை... குணமாக எளிய வழிமுறைகள்

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Nov 01, 2019 | 18:10 IST | Times Now

இரத்த சோகைக்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரைக்கும் உட்டச்சத்து உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

Anemia, Anaemia, இரத்த சோகை
இரத்த சோகை  |  Photo Credit: Getty Images

இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவதால் இரத்த சோகை ஏற்படுகிறது. இதனை ஹீமோகுளோபின் குறைபாடு என்றும் கூறுவர். ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் அளவையாகும்.

போதியளவு பிராணவாயு சுவாசிக்காததால் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. சுவாசத்தில் பிராணவாயு குறைந்தால் மயக்கம் மற்றும் முச்சுத்திணறல் ஏற்படும். இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது ஏற்படுவது வழக்கமாகும்.

இரத்த சோகையில் 3 வகைகள் உண்டு. வைட்டமின் C மற்றும் B-12 குறைபாடு காரணமாக ஏற்படும் இரத்த சோகை, வைட்டமின் குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை என்று அறியப்படுகிறது. அதே போல, இரும்புச்சத்து குறைபாடு காரணமாகவும் இரத்த சிவப்பணுக்கள் குறையலாம். இதனை இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை என்று கூறுவர். நோய்தொற்று காரணமாக ஏற்படும் இரத்த சோகை, குரோனிக் அனீமியா என்று அழைக்கப்படுகிறது.

இரத்த சோகைக்கான அறிகுறிகள்

 • மயக்கம்
 • உடற்சோர்வு
 • தலைவலி
 • தோல் வெளுத்தல்
 • உடல் வெப்பம் குறைதல்
 • பசியின்மை
 • நெஞ்சுவலி
 • சீரற்ற இதயத்துடிப்பு
 • வாய் மற்றும் நாக்கில் வீக்கம்
 • முச்சுத்திணறல்

இரத்த சோகை ஏற்பட காரணங்கள்

 • வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு
 • தன்னெதிர்ப்பு நோய்கள் (autoimmune disorders)
 • இரத்தப்போக்கு
 • மருந்து, மாத்திரைகள்

இரத்த சோகை யாரை பாதிக்கும்?

 • மாதவிடாயின் போது அதிக ரத்த்ப்போக்கு உள்ளவர்கள்
 • கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள்
 • வைட்டமின், இரும்புச்சத்து குறைவாக எடுத்துக்கொள்வோர்
 • குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள்

இரத்த சோகை குணமாக்க சில வழிமுறைகள்

 1. இரும்புச்சத்து அதிகமுள்ள பயறு வகைகள், சோயா பன்னீர், பச்சை நிறக் காய்கறிகள், மாதுளைப் பழம், முருங்கைக் கீரை, பீன்ஸ், உருளைக்கிழங்கு, ஆலிவ் ஆகிய உணவுகள் சாப்பிடவும்.
 2. வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடவும்.
 3. தேவைப்பட்டால் மருத்துவர் பரிந்துரைக்கும் ஊட்டச்சத்து மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.

இரத்த சோகைக்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரைக்கும் உட்டச்சத்து உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட பரிந்துரைகள் அனைத்தும் பொது பயன்பாட்டிற்கானவை. அவை யாவும் மருத்துவ ஆலோசனையாக கருதப்படக் கூடாது. மருத்துவம் சார்ந்த கேள்விகள் அல்லது சந்தேகங்களுக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.

NEXT STORY