தரையிலிருந்து 160 அடி உயரத்தில் தொங்கும் சாகச உணவகம்!

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Oct 08, 2019 | 19:31 IST | Times Now

24 பேர் உட்காரக்கூடிய 'பிளை டைனிங்' எனப்படும் உணவகத்தில் பணியாளர்கள் செல்லும் வகையில் இடமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பும் ஹார்னஸும் கொடுக்கப்பட்டுள்ளது.

தரையிலிருந்து 160 அடி உயரத்தில் தொங்கும் சாகச உணவகம், Adventure restaurant in Noida serves food at 160 feet up in the air
தரையிலிருந்து 160 அடி உயரத்தில் தொங்கும் சாகச உணவகம்  |  Photo Credit: Facebook

நொய்டா: உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் தரையிலிருந்து 160 அடி உயரத்தில் இயங்கிவரும் தொங்கும் உணவகம் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

உத்தரப்பிரதேசம் நொய்டாவில் உள்ள கார்டன் கல்லிரியா மாலில் பிளை டைனிங் என்ற பெயரில் ஒரு உணவகம் இயங்கி வருகிறது. இங்கு உணவுடன் சாகசமும் இணையும் வகையில் தரையிலிருந்து 160 அடி உயரத்தில் கிரேன் மூலம் தொங்கும் இடத்தில் உணவு பரிமாறப்படுகிறது. 24 பேர் உட்காரக்கூடிய இந்த இடத்திற்கு நடுவில் பணியாளர்கள் செல்லும் வகையில் இடமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பும் ஹார்னஸும் கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

இதுபற்றி உணவகத்தின் உரிமையாளர் நிகில் குமார் கூறுகையில், துபாய்க்கு சென்ற போது இது போன்ற ஒரு சாகச உணவகத்தை பார்த்ததாகவும், அது போல இந்த பிளை டைனிங் உணவகத்தை அவர் அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இங்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் முறைப்படி பரிசோதனை செய்யப்பட்டு ஜெர்மனியில் இருந்து பெற்றதாகவும், கிரேனை துபாயில் இருந்து வாங்கியுள்ளதாகவும் நிகில் குமார் தெரிவித்தார்.

 

 

மாலை 6.00 மணிக்கு திறக்கப்படும் இந்த உணவகம் இரவு 10 மணி வரை இயங்குகிறது. 12-85 வயதுடையவர்கள் இந்த சாகச உணவகத்தில் உணவருந்தலாம். 40 நிமிடங்கள் நீடிக்கும் இந்த சாகச பயணத்தில் மாக்டேய்ல், ஸ்டார்ட்டர்ஸ், மெயின் கோர்ஸ், டெஸர்ட்ஸ் அடங்கிய சைவ உணவுகள் பரிமாறப்படுகிறது. இந்த சாகசத்திற்கு விலை ரூபாய் 2499. இங்கு பாதுகாப்பு காரணமாக மது தரப்படுவதில்லை. மேலும் கட்டணமின்றி புகைப்படங்களும் எடுத்து தரப்படுகிறது.   
 

NEXT STORY