அசிடிட்டி தொல்லையால் அவதிப்படுபவரா நீங்கள்? உங்களுக்காகவே எளிமையான 5 டிப்ஸ்!

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Sep 20, 2019 | 20:30 IST | Times Now

சரிவர உண்ணாதது, புகைப்பிடித்தல், போதிய உடற்பயிற்சி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி அசிடிட்டி ஏற்படலாம். கரிப்பிணிகள் மற்றும் உடற்பருமன் உள்ளவர்களுக்கும் அசிடிட்டி ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

5 tips to prevent acidity, அசிடிட்டியை தவிர்க்க 5 டிப்ஸ்!
அசிடிட்டியை தவிர்க்க 5 டிப்ஸ்!  |  Photo Credit: Getty Images

அசிடிட்டி எனப்படும் அமிலத்தன்மை நம் அனைவருக்கும் தொல்லை கொடுப்பது வழக்கம். வயிற்றிலிருக்கும் அமிலம் உணவுக்குழாயின் மேல் எழும்பும் போது ஏற்படும் நெஞ்செரிச்சலே அசிடிட்டி என்று அழைப்படுகிறது. அடிக்கடி அசிடிட்டி ஏற்படுபவர்களுக்கு அதுவே நோயாக மாறும் ஆபத்தும் உள்ளது. அசிடிட்டி ஏற்படுவதை தவிர்க்க வீட்டு வைத்தியமே போதுமானது.

உணவு மற்றும் வாழ்க்கை முறையில் எளிய மாற்றங்கள் செய்வதன் மூலம் அசிடிட்டி ஏற்படுவதை தவிர்க்க முடியும். சரிவர உண்ணாதது, புகைப்பிடித்தல், போதிய உடற்பயிற்சி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி அசிடிட்டி ஏற்படலாம். கரிப்பிணிகள் மற்றும் உடற்பருமன் உள்ளவர்களுக்கும் அசிடிட்டி ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

அசிடிட்டியை தவிர்ப்பதற்கான எளிய வழிமுறைகள் இதோ:

  1. சூவிங் கம்: பைக்கார்பனேட் அடங்கிய சூவிங் கம் சாப்பிடுவதன் மூலம் எச்சில் அதிகம் ஊறி உணவுக்குழாய் வழியே சென்று வயிற்று அமிலத்தை சுத்தம் செய்யும்.
  2. உணவில் கவனம்: கொழுப்பு சத்து மிகுந்த உணவுகள், கஃபீன், சோடா, புதினா, சிட்ரஸ் பழங்கள், தக்காளி, வெங்காயம் ஆகியவை குறைவாக உண்ண வேண்டும். நார்ச்சத்து மிகுந்த உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று வேளை உண்பதற்கு பதிலாக 4-5 வேளை பிரித்து உண்ணலாம்.
  3. மாவுச்சத்தை குறைக்கவும்: செரிமானம் ஆகாத மாவுச்சத்துக்கள் பாக்டீரியா வளர வழிசெய்யும். இதனால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து அமிலத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், மாவுச்சத்து குறைவாக எடுத்துக்கொள்வதன் மூலம் அசிடிட்டி ஏற்படுவதை தவிர்க்க முடியுமா என்பதை உறுதி செய்யும் வகையில் போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை.
  4. மது அருந்தாதீர்: மது அருந்துதல் அமிலத்தன்மையை அதிகரிக்கும். நெஞ்செரிச்சலை அதிகரிப்பதுடன், உணவுக்குழாயில் இருந்து அமிலம் நீங்குவதை தவிர்க்கும். எனவே, மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்த்தல் நல்லது.
  5. உறங்கும் முன் சாப்பிட வேண்டாம்: அசிடிட்டி தொல்லை இருப்பவர்கள் உறங்குவதற்கு மூன்று மணிநேரம் முன்பாகவே உணவருந்தி முடிக்கவேண்டும். தூங்கும் முன் சாப்பிட்டால் அமிலத்தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
NEXT STORY