தேர்தல் களத்தால் மன அழுத்தமா? கட்டுக்குள் கொண்டுவர 5 எளிய வழிமுறைகள்!

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Apr 12, 2019 | 16:35 IST | Times Now

தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த சில எளிய வழிமுறைகளைக் கையாலலாம்.

 மன அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவர 5 வழிமுறைகள்
மன அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவர 5 வழிமுறைகள்  |  Photo Credit: Thinkstock

சென்னை: மன அழுத்தத்தை முறையாக கட்டுக்குப் படுத்தாமல் விட்டுவிட்டால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிறிய அளவு மன அழுத்தம் இருந்தால் அதனை எளிதாக கட்டுப்படுத்தலாம். அதேசமயம் அதிக அளவு மன அழுத்தம் ஏற்பட்டால் நோயால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்.  மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. 

எங்கு பார்த்தாலும் பிரசாரக் கூட்டங்கள், அரசியல் விவாதங்கள். தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் தேர்தல் தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இதனால், தேர்தல் தொடர்பான விவாதங்கள் தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

ஆனால், ஒன்றை மட்டும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம் நீண்ட நாட்களாகத் தொடர்ந்தால், இருதய நோய்கள், ரத்த  அழுத்தம், உடல் பருமன், உணவு உண்பதில் பிரச்சனை, உடலுறுவில் பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகள் நேரிடலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

எனவே, தேர்தல் கால மன அழுத்தத்தை சரிசெய்ய சில எளிய வழிமுறைகளைக் காணலாம்:

தியானம்: தியானம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக தேர்தல் குறித்த செய்திகளால் ஏற்படும் மன உளைச்சல் போன்றவற்றை சரிசெய்ய தியானம் ஒரு சிறந்த வழிமுறையாகும். தியானம் செய்வதால் மனம் நிம்மதி பெறும். ஒரு அமைதியான அறைக்குள் அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு, மனதை கட்டுப்படுத்தி தியானம் செய்தால் சிறந்த பலன் கிடைக்கும்

யோகா: மன அழுத்தத்தை கட்டுப்படுத்த பல்வேறு யோகாசன பயிற்சிகள் உள்ளன. யோகா செய்வதால் உடல் நலன் சீராகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

சமூக வலைதளங்களை கட்டுக்குள் வைக்க: சமூக வலைதளங்களில் தொடர்ந்து செயல்படுவதை அவ்வப்போது குறைத்து கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல், தேர்தல் தொடர்பான செய்திகளை தொடர்ந்து பார்ப்பதையும் குறைத்துக் கொள்ளலாம். அதற்கு பதில் இயற்கையான சுழலில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.

விவாதங்களை தவிர்க்க: தேர்தல் அரசியல் தொடர்பான விவாதங்கள் பல்வேறு எதிர்மறையான கருத்துக்களை உருவாக்கும். எனவே, தேர்தல் தொடர்பான விவாதங்களில் ஈடுபடாமல் தவிர்த்தால் மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்கலாம். எனவே, ஒத்த கருத்து உடையவர்களுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துவது சிறந்தது.

நேர்மறையாக சந்திக்க: தேர்தல் தொடர்பான மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க தினந்தோறும் செய்ய முக்கிய விஷயங்களை பட்டியலிட்டு, அதனை செயல்படுத்த முயற்சி செய்யலாம்.  இதன்மூலம், மன நிறைவு ஏற்படுவதோடு, தேர்தல் தொடர்பான விவகாரங்களில் தலையிடாமல், மனதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

NEXT STORY
தேர்தல் களத்தால் மன அழுத்தமா? கட்டுக்குள் கொண்டுவர 5 எளிய வழிமுறைகள்! Description: தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த சில எளிய வழிமுறைகளைக் கையாலலாம்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola