இரட்டை பின்புற கேபரா, 3000mAh மின்கலம், 4GB ரேம், 10W சார்ஜர், சிம் ஜாக்கெட், பாதுகாப்பு கேஸ் ஆகிய அம்சங்களுடன் புதிய மோட்டோ E6 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
இரட்டை பின்புற கேபரா, 3000mAh மின்கலம், 4GB ரேம், 10W சார்ஜர், சிம் ஜாக்கெட், பாதுகாப்பு கேஸ் ஆகிய அம்சங்களுடன் புதிய மோட்டோ E6 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
6.1 அங்குல எச்டி+ திரை கொண்டது மோட்டோ E6.
மீடியாடெக் ஹீலியோ P22 எட்டு கோர் புராசசர், 4GB ரேம் மற்றும் 64GB சேமிப்பிடம் கொண்டது மோட்டோ E6. மேலும், மைக்ரோSD கார்ட் கொண்டு 512GB வரை சேமிப்பிட நீட்டிப்பு செய்யலாம். முகம் மற்றும் கைரேகை கொண்டு போனை திறக்கும் வசதியும் உள்ளது.
ஆண்ட்ராய்ட் 9 இயங்குதளம் கொண்டு இயங்கும் மோட்டோ E6, 3000mAh மின்கலம் கொண்டு இயங்குகிறது. மைக்ரோ USB 10W அதிவிரைவு சார்ஜர் கொண்டு மின்சாரம் ஏற்றலாம். 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மூலம் FM ரேடியோ கேட்கலாம்.
இரட்டை கேமரா கொண்ட மோட்டோ E6 போனில், 13 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் 2 மெகாபிக்சல் கூடுதல் கேமரா உள்ளது.
முன்புறம் 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
பாலிஷ்ட் கிரானைட் மற்றும் ரிச் கிரான்பெர்ரி எனும் இரண்டு நிறங்களில் மோட்டோ E6 விற்கப்படும்.