இன்று விற்பனைக்கு வருகிறது ரெட்மி நோட் 7 ப்ரோ, பிளிப்கார்ட், Mi.Com-இல் வாங்கலாம்!

தொழில்நுட்பம்
Updated Jun 19, 2019 | 11:36 IST | Times Now

ஷியோமியின் ரெட்மி நோட் 7 ப்ரோ பிளிப்கார்ட் ஃபிளாஷ் சேலில் இந்தியாவில் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

Xiaom Redmi note 7 pro
ஷியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ  |  Photo Credit: Times Now

ஷியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7 ப்ரோ இன்று மதியம் 12 மணிக்கு இந்தியாவில்,பிளிப்கார்ட் ஃபிளாஷ் சேலில் விற்பனைக்கு வருகிறது. பிளிப்கார்ட் தவிர Mi.com இணையத்தளத்தில் வாங்கலாம். ரெட்மி மொபைல்கள் ஆன்லைனில் சேல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிடும். இந்த ரெட்மி நோட் 7 ப்ரோவும் சேல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முற்றிலும் விற்றுத் தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெய்ஜிங்கை தலைமையகமாக கொண்ட ஷியோமி நிறுவனத்தின் ரெட்மி மொபைல்கள்,மொபைல் போன் ரசிகர்களால் இடையே  நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது அந்த வரிசையில் வெளியாகி உள்ளது ரெட்மி நோட் 7 ப்ரோ.கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்த நோட் 7 ப்ரோ 64ஜிபி+4 ஜிபி வேரியண்ட்  ரூபாய் 13,999-க்கும்,128ஜிபி+6ஜிபி வேரியண்ட் ரூபாய் 16,999-க்கும் விற்கப்படுகிறது.

 


இதன் அறிமுக விழாவில் அந்த நிறுவனத்தினர் ரெட்மி நோட் 7 ப்ரோவில் இதன் முந்தைய மாடல் மொபைல்களை விட ஸ்ப்ளாஷ் ரெஸிஸ்டன்ஸ் இன்னும் சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்தனர். மேலும் உபயோகிக்க சுலபமாகவும் பயன்படுத்துவதற்கு எளிதாகவும் இருக்கும் எனவும் தெரிவித்திருக்கிறது.ரெட்மி மொபைல்கள் அதிக வெப்பம் வெளியிடுகிறது என விமர்சிக்கப்பட்டாலும், குறைந்த பட்ஜெட்டில் ஸ்மார்ட் போன் வாங்க நினைப்பவர்ளின் கனவு பிராண்டாகத் திகழ்வது ரெட்மி என்பதை மறுப்பதற்கில்லை. இந்நிலையில் ரெட்மி நோட் 7 ப்ரோவும் அதே போல நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

NEXT STORY
இன்று விற்பனைக்கு வருகிறது ரெட்மி நோட் 7 ப்ரோ, பிளிப்கார்ட், Mi.Com-இல் வாங்கலாம்! Description: ஷியோமியின் ரெட்மி நோட் 7 ப்ரோ பிளிப்கார்ட் ஃபிளாஷ் சேலில் இந்தியாவில் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola