வாட்ஸப்பில் இனி ஃபிங்கர் ஃப்ரிண்ட் வசதி...ஆனால் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாதாம்!

தொழில்நுட்பம்
Updated Apr 25, 2019 | 22:38 IST | Times Now

ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.19.106 அடிப்படையில் WabetaInfo இதை பரிசோதித்துள்ளது. எனினும், ஃபிங்கர் ஃப்ரிண்ட் உபயோகத்தில் இருக்கும்போது ஸ்க்ரீன்ஷாட் எடுக்கவும் முடியாதாம்.

technology, தொழில்நுட்பம்
வாட்ஸப் மாதிரிப்படம்   |  Photo Credit: Twitter

சென்னை: உலகின் பிரபல தகவல் பறிமாற்ற அப்ளிகேஷனான வாட்ஸப் தனது புதிய அப்டேட் மூலமாக அந்தரங்க தகவல் பரிமாற்ற மெசேஜ்களை பயனாளர்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுப்பதற்கு முற்றுபுள்ளி வைக்கவுள்ளது.  

வாட்ஸப்பின் புதிய பாதுகாப்பு கொள்கைகளில் ஒன்றாக வெளிவர இருக்கும் இந்த புதிய வசதி, WabetaInfo அடிப்படையில் பயனாளர்கள் மற்றும் தகவல் பரிமாற்றம் செய்பவர்களின் ப்ரைவசியை பாதுகாக்கும் வகையில் அமைய உள்ளது.

இந்த புதிய வசதியால் விரைவில் உங்களது வாட்ஸப் தகவல்கள், உங்கள் விரல்ரேகை இருந்தால் மட்டுமே படிக்க முடியும். எனில், யாருடமேனும் உங்கள் ஃபோன் சிக்கிக்கொண்டாலும் அவர்களால் உங்கள் பிங்கர் ஃப்ரிண்ட் இன்றி வாட்ஸப் மெஜேஸ்களைப் படிக்க முடியாது. அதே நேரம், இந்த வசதி ஆக்டிவேட்டில் இருந்தால் மெசேஜ்களை ஸ்க்ரீன்ஷாட்டும் எடுக்க முடியாது.

ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.19.106 அடிப்படையில் WabetaInfo இதை பரிசோதித்துள்ளது. எனினும், ஃபிங்கர் ஃப்ரிண்ட் உபயோகத்தில் இருக்கும்போது ஸ்க்ரீன்ஷாட் எடுக்கவும் ஏன் தடை விதித்துள்ளது வாட்ஸப் நிறுவனம் என்று வாபீட்டாஇன்போ தெரிவித்துள்ளது. 

இந்த வசதியை நாம் எனாபிள் செய்யும்போது, “பிங்கர் பிரிண்ட் செக்யூரிட்டி உபயோகத்தில் இருக்கும்போது வாட்ஸப் மெஜேஸ்களை ஸ்க்ரீன்ஷாட் எடுக்கும் வசதி ப்ளாக் செய்யப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NEXT STORY
வாட்ஸப்பில் இனி ஃபிங்கர் ஃப்ரிண்ட் வசதி...ஆனால் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாதாம்! Description: ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.19.106 அடிப்படையில் WabetaInfo இதை பரிசோதித்துள்ளது. எனினும், ஃபிங்கர் ஃப்ரிண்ட் உபயோகத்தில் இருக்கும்போது ஸ்க்ரீன்ஷாட் எடுக்கவும் முடியாதாம்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola