’இனி பர்மிஷன் இல்லாமல் ஒருவரை க்ரூப்பில் சேர்க்க முடியாது’ - வருகிறது வாட்ஸப்பின் புதிய வசதி!

தொழில்நுட்பம்
Updated Apr 03, 2019 | 14:53 IST | Times Now

யாரார் தங்களை எந்தெந்த குழுக்களில் இணைக்கலாம் என்பதை தேர்வு செய்யும் வசதி வாட்ஸப் செட்டிங்க்ஸிலேயே பயனாளிகளுக்கு அளிக்கப்படும்.

whatsapp, வாட்ஸப்
வாட்ஸப் செயலி உபயோகம் - மாதிரிப்படம்  |  Photo Credit: Getty Images

சென்னை: வாட்ஸப் செயலியில் இனி பயனாளரின் அனுமதியின்றி அவரை க்ரூப்களில் சேர்க்கும் நடைமுறைக்கு புதிய அப்டேட் மூலமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது அந்நிறுவனம்.

இதன்படி, ஒருவரின் அனுமதியின்றி மற்றொருவர் அவரை எந்தவொரு வாட்ஸப் குழுக்களிலும் உறுப்பினராக இணைக்க முடியாது. 

உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்ப உலகிலும், சமூக வலைத்தள பரப்பளவிலும் முக்கிய இடம் பிடித்திருப்பது வாட்ஸப் செயலி. உலகளவில் கிட்டதட்ட 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த செயலியை தகவல் பரிமாற்றத்திற்காகவும், வீடியோக்கள், புகைப்படங்கள், டாக்குமெண்ட்களை ஷேர் செய்து கொள்ளும் ஒரு ஈசி காண்டாக்ட் செயலியாகவும் பயன்படுத்தி வருகின்றனராம். 

மேலும், இந்தியாவில் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் மக்களிடம் தங்களை கொண்டு சேர்க்க அரசியல் கட்சிகள் வாட்ஸப் குழுக்களை அதிகளவில் உபயோகித்து வருகின்றன. இன்னொரு பக்கம், புடவை விற்பனை, இளைஞர்கள் குழு, சமூக சேவைக்கான குழுக்கள், செய்திக் குழுக்கள் என வாட்ஸப் க்ரூப்களின் எண்ணிக்கையும் கோடியைத் தாண்டும்.

இந்நிலையில்தான் இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸப் நிறுவனம். அதன்படி, யாரார் தங்களை எந்தெந்த குழுக்களில் இணைக்கலாம் என்பதை தேர்வு செய்யும் வசதி வாட்ஸப் செட்டிங்க்ஸிலேயே பயனாளிகளுக்கு அளிக்கப்படும். அதன்படி, அக்கவுண்ட்-ப்ரைவசி-க்ரூப்ஸ் என்கிற வசதிக்குள் உள்சென்று ‘நோபடி (No body), மை காண்டாக்ட்ஸ் (My contacts), எவ்ரிஒன் (everyone) என்கிற ஆப்ஷன்களில் ஒன்றை நமது வசதிக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். இதன்மூலம் நம்முடைய அனுமதிக்கு ஏற்றவாறு மட்டுமே நம்மை குழுக்களில் இணைக்க முடியும். 

அவ்வாறு, ஒருவரைக் குழுவில் இணைக்க அவருக்கு தனிப்பட்ட தகவல் அனுப்பலாம். அந்த அழைப்பை குறிப்பிட்ட பயனாளி ஏற்றுக்கொள்ள மூன்று நாட்கள் அவகாசமும் அளிக்கப்படுமாம். மேலும், இந்த வசதி விரைவில் அனைத்து மொபைல் யூசஸ்ர்களுக்கும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது வாட்ஸப் நிறுவனம். 

NEXT STORY
’இனி பர்மிஷன் இல்லாமல் ஒருவரை க்ரூப்பில் சேர்க்க முடியாது’ - வருகிறது வாட்ஸப்பின் புதிய வசதி! Description: யாரார் தங்களை எந்தெந்த குழுக்களில் இணைக்கலாம் என்பதை தேர்வு செய்யும் வசதி வாட்ஸப் செட்டிங்க்ஸிலேயே பயனாளிகளுக்கு அளிக்கப்படும்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola