ஹேக்கர்களின் பிடியில் வாட்ஸப்?! சைபர் அட்டாக்கை தடுக்க உடனடியாக அப்டேட்டுங்கள்!

தொழில்நுட்பம்
Updated May 14, 2019 | 16:03 IST | Times Now

பாதுகாப்புகள் நிறைந்த வாட்ஸப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயன்றதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

technology, தொழில்நுட்பம்
வாட்ஸப் அப்டேட் அவசியம் 

நியூயார்க்: உலகளாவிய அளவில் பிரபல சமூக செய்தி பகிர்வு ஊடகமான வாட்ஸப்பில் ஹேக்கர்கள் புகுந்துள்ளதால், வாட்ஸப் உபயோகிப்பாளர்கள் அச்செயலியை உடனடியா க அப்டேட் செய்யக் கோரியுள்ளது அந்நிறுவனம்.

உலகம் முழுவதும் எளிமையான தகவல் பரிமாற்றத்திற்காக கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸப் செயலியை உபயோகித்து வருகின்றனர். செய்திகள் அனுப்ப, வீடியோ, போட்டோ ஷேரிங், வீடியோ கால், வாய்ஸ் கால் என பல்வேறு வசதிகளை ஒரு சொடக்கில் உள்ளடக்கியது வாட்ஸப்.  இதனால், பயனாளர்களின் பாதுகாப்பில் எப்போதுமே அந்நிறுவனம் அதிக கவனம் கொண்டுள்ளது. 

இந்நிலையில், அத்தகைய பாதுகாப்புகள் நிறைந்த வாட்ஸப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயன்றதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், பத்திரிக்கையாளர்கள், சினிமா பிரபலங்கள், முக்கிய புள்ளிகள் உள்ளிட்ட சில பயனாளர்களை மட்டும் குறிவைத்து அவர்களுடைய சொந்த விவரங்களை திருட திறமையான ஹேக்கர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹேக் செய்யப்பட வேண்டியவர்களுக்கு ஒரு வாட்ஸப் அழைப்பு வரும். அதன் மூலமாக வாட்ஸப் மற்றும் ஸ்மார்ட்போனை கண்காணிக்கும் சாப்ட்வேர் ஒன்று அந்த செல்போனில் தானாகவே இன்ஸ்டால் ஆகிவிடுமாம். அதன்பின்பு அந்த செல்போன் ஹேக்கர்களால் தொடர்ந்து கண்காணிப்பட்டு அனைத்து விவரங்களும் திருடப்படுவது எளிதாகி விடுமாம். 

தற்போதைய புதிய அப்டேட்டின் மூலமாக அதிகளவிலான பாதுகாப்பு அம்சங்கள் வாட்ஸப்பில் உள்ளதாகவும், இதனால் ஹேக்கர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறி பயனாளர்களை உடனடியாக வாட்ஸப் செயலியை அப்டேட் செய்ய கோரிக்கை விடுத்துள்ளது அந்நிறுவனம். 

NEXT STORY
ஹேக்கர்களின் பிடியில் வாட்ஸப்?! சைபர் அட்டாக்கை தடுக்க உடனடியாக அப்டேட்டுங்கள்! Description: பாதுகாப்புகள் நிறைந்த வாட்ஸப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயன்றதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola