உலகின் பல பாகங்களில் முடங்கிய வாட்ஸப் - அதிர்ச்சியில் பயனாளர்கள்!

தொழில்நுட்பம்
Updated Jun 06, 2019 | 21:49 IST | Times Now

உலகின் பல இடங்களிலும் இன்று சொல்லாமல் கொள்ளாமல் வாட்ஸப் செயலி திடீரென்று முடங்கியது. முக்கியமாக இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் செயல் இழந்துள்ளது.

whatsapp, வாட்ஸப்
மாதிரிப்படம்  |  Photo Credit: Getty Images

சென்னை: உலகளாவிய அளவில் பல்வேறு இடங்களில் வாட்ஸப் செயலி திடீரென்று முடங்கியதால் பயனாளர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகினர்.

கோடிக்கணக்கான மக்கள் தற்காலத்தில் செய்திகள் அனுப்புதல், வீடியோ, புகைப்பட பரிமாற்றம், வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் போன்ற பல்வேறு டிஜிட்டல் உலக வசதிகளுக்கு எளிதாக பயன்படுத்துவது வாட்ஸப் செயலி.

 

 

அதனால், வாட்ஸப் செயலியின் பாதுகாப்பு அம்சங்களில் தனிக்கவனம் கொண்டுள்ள அந்நிறுவனம் பல்வேறு அப்டேட்டுகளை அடிக்கடி வெளியிட்டு செயலியின் பாதுகாப்பு அம்சங்களை அதிகரித்து வருகிறது.

 

 

இந்நிலையில் உலகின் பல இடங்களிலும் இன்று சொல்லாமல் கொள்ளாமல் வாட்ஸப் செயலி திடீரென்று முடங்கியது. முக்கியமாக இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் செயல் இழந்துள்ளது. ஆனால், இதுகுறித்து வாட்ஸப் நிறுவன தரப்பில் இருந்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், பயனாளர்கள் இதுகுறித்து மற்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

NEXT STORY
உலகின் பல பாகங்களில் முடங்கிய வாட்ஸப் - அதிர்ச்சியில் பயனாளர்கள்! Description: உலகின் பல இடங்களிலும் இன்று சொல்லாமல் கொள்ளாமல் வாட்ஸப் செயலி திடீரென்று முடங்கியது. முக்கியமாக இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் செயல் இழந்துள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola