வாட்ஸ்ஆப்பில் கைரேகை லாக்: பயன்படுத்துவது எப்படி?

தொழில்நுட்பம்
Updated Aug 13, 2019 | 18:43 IST | Times Now

வாட்ஸ்ஆப்பின் இந்த புதிய வசதியை பயன்படுத்துவதன் மூலம் மூன்றாம் நபர்கள் யாரும் வாட்ஸ்ஆப் செயலியைத் திறந்து உறையாடல்களைப் பார்ப்பதை தடுக்க முடியும்.

WhatsApp adds fingerprint lock feature to Android app
வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்ட் செயலியில் கைரேகை லாக் வசதி அறிமுகம்  |  Photo Credit: IANS

வாட்ஸ் அப் ஆண்ட்ராய்ட் செயலியின் புதிய பீட்டா வெர்ஷனில் கைரேகை லாக் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் ஐஃபோன் பயனாளிகளுக்கு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது, ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்கான வாட்ஸ் அப் செயலியின் வெர்ஷன் 2.19.221ல் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்சமயம் பீட்டா வெர்ஷனில் மட்டுமே உள்ள இந்த வசதி வரும் வாரங்களில் பிற பயனாளிகளும் பயன்படுத்த முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வசதியை பயன்படுத்துவதன் மூலம் மூன்றாம் நபர்கள் யாரும் வாட்ஸ் அப் செயலியைத் திறந்து உறையாடல்களை பார்க்க முடியாமல் செய்யலாம்.

இந்த வசதியை பயன்படுத்த ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் மார்ஷ்மல்லோ அல்லது அதற்கும் மேற்பட்ட வெர்ஷன் உங்கள் போனில் இருக்கவேண்டும். மேலும், உங்கள் ஃபோனில் கைரேகை சென்சார் இருக்கவேண்டியது அவசியம்.

எப்படி பயன்படுத்துவது?

  1. முதலில் உங்கள் ஆண்ட்ராய்ட் ஃபோனில் உள்ள வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்யுங்கள்.
  2. Privacy அமைப்புகளுக்குள் செல்லுங்கள். கீழே சென்றால் ’Fingerprint lock’ வசதி தென்படும்.
  3. Fingerprint lock வசதியை தேர்ந்தெடுங்கள். Fingerprint lock பக்கம் தென்படும். அதில், ‘Unlock with fingerprint’ தேர்ந்தெடுங்கள்.
  4. உங்கள் கைரேகையை பதிவு செய்யுங்கள். தேர்வு செய்யப்பட்டவுடன் ஃபோனின் பின்புறம் உள்ள கைரேகை சென்சாரில் உங்கள் விரல் நுணியால் தொட்டு கைரேகையை பதிவு செய்யுங்கள்.
  5. தானியங்கி லாக் வசதியை தேர்வு செய்யுங்கள் - உடனடியாக / ஒரு நிமிடம் கழித்து / 30 நிமிடங்கள் கழித்து லாக் செய்யும் படி உங்கள் வசதிக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ளுங்கள். மேலும், ‘Show content in notifications’ என்றம் வசதியில் நோட்டிஃபிகேஷன்களில் அனுப்புநரின் பெயர் பற்றும் செய்தியை மறைக்கும் படி அமைத்துக்கொள்ளலாம்.
NEXT STORY