நாடு முழுவதும் பல மாநிலங்களில் முடங்கியது வோடபோன் சேவை!

தொழில்நுட்பம்
Updated Mar 30, 2019 | 21:15 IST | Times Now

வோடபோன் தொலைத்தொடர்பு கேபிள்களில் ஏற்பட்ட பாதிப்பே இந்த சேவை பிரச்சினைக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. 

vodafone, வோடபோன்
வோடபோன் லோகோ   |  Photo Credit: Twitter

சென்னை: தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் செல்போன் சேவை நிறுவனமான வோடபோன் நிறுவனத்தின் சேவை இன்று திடீரென்று பாதிக்கப்பட்டது.

வோடபோன் தொலைத்தொடர்பு கேபிள்களில் ஏற்பட்ட பாதிப்பே இந்த சேவை பிரச்சினைக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. 

ஏர்செல் நிறுவனம் கடன்பிரச்சனையால் மூடப்பட்டது. அப்போதே வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். 

ஏர்செல்லை அத்தனை காலம் நம்பியிருந்த லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் போர்டல் முறையில் தங்கள் எண்களை பி.எஸ்.என்.எல், ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவன சேவைகளுக்கு மாற்றிக் கொண்டார்கள்.

எனினும், ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ வருகை மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை சவாலில் தள்ளியது. இந்த நிலையில்தான் வோடபோன் நெட்வொர்க்கில் தற்போது அடிக்கடி பல பிரச்சினைகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

மேலும், குறுஞ்செய்திகள், இணையசேவை ஆகியற்றில் பிரச்சினைகள் அடிக்கடி வந்தவண்ணம் இருக்கின்றன. வோடபோன் கஸ்டமர் கேர்க்கு போன் செய்தாலும் அதிகாரிகள் யாரும் பேசுவதில்லை என்று வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். 

NEXT STORY
நாடு முழுவதும் பல மாநிலங்களில் முடங்கியது வோடபோன் சேவை! Description: வோடபோன் தொலைத்தொடர்பு கேபிள்களில் ஏற்பட்ட பாதிப்பே இந்த சேவை பிரச்சினைக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola