Vivo U10 பட்ஜெட் ஸ்மார்ட்போன் செப். 29-ல் வெளியீடு - முழு விவரம்

தொழில்நுட்பம்
Updated Sep 24, 2019 | 20:05 IST | Times Now

6.35 அங்குல திரை, 5,000 mAh மின்கலம், எட்டு-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 665 ப்ராசசர் கொண்ட இந்த போனில் 18W வேகத்தில் மின்சாரம் ஏற்றலாம்.

Vivo U10
Vivo U10 

வீவோ நிறுவனம் தனது புதிய U10 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலை கொண்ட இந்த பட்ஜெட் போன் பெரிய திரை, நீடித்து உழைக்கும் பேட்டரி, துல்லியமான கேமரா ஆகிய வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

புதிய வீவோ U10 ஸ்மார்ட்போனில் மூன்று ரகங்கள் உள்ளன. 3GB/32GB கொண்ட மாடல் ரூ.8,990-க்கும், 3GB/64GB மாடல் ரூ.9,990-க்கும், 4GB/64GB மாடல் ரூ.10,990-க்கும் விற்கப்படும். செப்டம்பர் 29-ஆம் தெதி முதல் வீவோ U10 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். அமேசான் மற்றும் வீவோ இணைதளம் வாயிலாக இந்த போன் விற்கப்படும். அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலை முன்னிட்டு இந்த போன் விற்பனைக்கு வருகிறது.

6.35 அங்குல திரையுடன் கூடிய வீவோ U10 ஸ்மார்ட்போன், 5,000 mAh திறன் படைத்த மின்கலம் கொண்டு இயங்குகிறது. எட்டு-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 665 ப்ராசசர் கொண்டு இயங்கும் இந்த போனில் 18W வேகத்தில் மின்சாரம் ஏற்றலாம். மேலும், 256GB வரை சேமிப்பிட நீட்டிப்பு செய்யலாம். மூன்று கேமரா வசதி கொண்ட இந்த போனில் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் சூப்பர் வைட் ஏங்கில் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா உள்ளன. இவை தவிற 8 மெகாபிக்சல் முன்புற கேமராவும் உள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி வாங்குவோருக்கு 10% தள்ளுபடி வழங்கப்படும். மேலும், ஜியோ டிஜிட்டல் லைஃப் வழங்கும் ரூ.6,000 மதிப்புள்ள சலுகைகள் பெறலாம். 6 மாதங்கள் வரையிலான கட்டணமில்லா தவணை முறையிலும் இந்த போனை வாங்கலாம்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...