இஸ்ரோவின் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை - புகைப்படங்களுடன் நாசா தகவல்

தொழில்நுட்பம்
Updated Sep 27, 2019 | 14:11 IST | Times Now

மாலை நேரத்தில் இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகக்  கூறும் நாசா, அடுத்த மாதம் வெளிச்சமான சமயத்தில் மேலும் பல புகைப்படங்கள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Moon photographed by NASA, நாசா ஆர்பிட்டர் எடுத்த நிலவின் புகைப்படம்
நாசா ஆர்பிட்டர் எடுத்த நிலவின் புகைப்படம்  |  Photo Credit: Twitter

சென்னை: இஸ்ரோவுடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட லேண்டர் விக்ரமை கண்டுபிடிக்க முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது. தனது ஆர்பிட்டர் கொண்டு விக்ரம் தரையிறங்கிய இடத்தை படம் பிடித்துள்ள நாசா, அங்கு விக்ரம் லேண்டர் தென்படவில்லை என தெரிவித்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

முன்னதாக, பூமியில் உள்ள தமது ஆய்வு நிலையங்களில் இருந்து லேண்டர் விக்ரமை தொடர்பு கொள்ளும் முயற்சியில் நாசா ஈடுபட்டது. அம்முயற்சிகள் பலனளிக்காக நிலையில் தனது லுனார் ரீகனைசன்ஸ் ஆர்பிட்டர் மூலம் லேண்டர் விக்ரம் தரையிரங்கிய பகுதியை புகைப்படம் எடுத்து நாசா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர்.

இந்நிலையில், ஆர்பிட்டர் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ள நாசா, விக்ரம் லேண்டர் இருக்குமிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளது. மாலை நேரத்தில் இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகக்  கூறும் நாசா, அடுத்த மாதம் வெளிச்சமான சமயத்தில் மேலும் பல புகைப்படங்கள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

 

 

லேண்டர் விக்ரமின் ஆயுட்காலம் ஒரு நிலவு தினம் என்ற நிலையில் கடந்த 21-ஆம் தேதி அதனுடன் தொடர்பு ஏற்படுத்துவதற்கான கெடு முடிந்தது. இருப்பினும், சந்திரயான்-2 ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

NEXT STORY