ரூபாய் 40,000 வரைக் குறைகிறது டி.விக்களின் விலை! - முழு விவரம் இதோ

தொழில்நுட்பம்
Updated Oct 01, 2019 | 15:54 IST | Times Now

சோனி, எல்.ஜி, சாம்சங் போன்ற முன்னணி பிராண்ட்டுகள் தங்களது டிவிக்களின் விலையைக் குறைத்துள்ளன.

டி.வி விலைகளில் அதிரடி தள்ளுபடி,Top brands cut television rates by up to 30%
டி.வி விலைகளில் அதிரடி தள்ளுபடி  |  Photo Credit: Twitter

விழாக்காலத்தை முன்னிட்டு முன்னணி தொலைக்காட்சித் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது டிவிக்களின் விலைகளைக் குறைத்துள்ளன.

இந்தியாவில் விற்பனையாகும் முன்னணி பிராண்ட்டுகளான சோனி, எல்.ஜி மற்றும் சாம்சங் தங்களது லார்ஜ் ஸ்க்ரீன் மற்றும் பிரீமியம் டிவி-களில் அதிகபட்சமாக ரூ.40,000 வரை தள்ளுபடி அளித்துள்ளன. அதே போல் பல நிறுவனங்கள் 32-இன்ச் மற்றும் 43-இன்ச் எல்.இ.டி டிவிக்களின் விலையையும் குறைந்துள்ளன. அதன் படி 32 இன்ச் டிவி ரூ.7,000-க்கும் 43 இன்ச் டிவி ரூ.21,000-க்கும் தற்போது விற்கப்படுகிறது. சோனியின் 55-இன்ச் 4K அல்ட்ரா HD டிவி-யின் விலை ரூ1.3 லட்சத்தில் இருந்து தற்போது ரூ 1.10 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. அதே போல் எல்.ஜி நிறுவனத்தின் 65-இன்ச் அல்ட்ரா HD மாடலின் விலை ரூ 1,34,990-இல் இருந்து ரூ 1,20,990 ஆக குறைந்துள்ளது. குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் சியோமி டிவி மேலும் ரூ 2000-3000 வரை தள்ளுபடி தந்து வருகிறது.    

டிவி வாங்குவோரின் எண்ணிக்கை சமீப காலமாக குறைந்து வருவதே, இந்த தள்ளுபடிக்கான காரணமாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளி முதல் விற்பனை மந்தமாக உள்ளதால், வரும் பண்டிகை தினங்களில் தொலைக்காட்சி விற்பனைகளை அதிகரிக்கும் நோக்கில் இந்த தள்ளுபடி அளிக்கப்படுகிறது. பல நிறுவனங்கள் குறைந்த லாபத்தோடு 30 சதவீதம் வரை விலையை குறைத்துள்ளது. மேலும் இதனைத் தொடர்ந்து ஆன்லைன் விலையும் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.       

NEXT STORY