ஸ்விகி மூலம் இனி எந்த பொருளையும் எந்த இடத்திற்கும் அனுப்பலாம்!

தொழில்நுட்பம்
Updated Sep 04, 2019 | 16:14 IST | Times Now

’ஸ்விகி கோ’ மூலம் எந்த ஒரு பொருளையும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு டெலிவரி செய்யமுடியும்.

Swiggy launches pick-up and drop service 'Swiggy Go', சுவிக்கி கோ டெலிவரி சேவை துவக்கம்
ஸ்விகி கோ டெலிவரி சேவை துவக்கம்  |  Photo Credit: IANS

புது டெல்லி: உணவு டெலிவரி சேவை வழங்கும் ஸ்விகி நிறுவனம் தற்போது பொருட்களை டெலிவரி செய்யும் சேவையை தொடங்கியுள்ளது. பெங்களூரு நகரில் தொடங்கப்பட்டுள்ள இச்சேவைக்கு ஸ்விக்கி கோ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 2020-க்குள் 300 நகரங்களுக்கு இந்த சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்விகி கோ மூலம் எந்த ஒரு பொருளையும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு டெலிவரி செய்யமுடியும். “நகர்புற வாடிக்கையாளர்களின் வாழ்க்கை தரத்தையும் சௌகரியத்தையும் மேம்படுத்துவதே ஸ்விகியின் நோக்கம்,” என்று அந்நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீஹர்ஷா மஜேட்டி கூறினார். 

முன்னதாக, மளிகை பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை டெலிவரி செய்யும் ஸ்விகி ஸ்டோர்ஸ் எனும் சேவையை அந்நிறுவனம் தொடங்கியது. ஸ்விகி கோ அறிமுகம் செய்யப்படுவதன் மூலம் உணவு மட்டுமின்றி அனைத்து பொருட்களையும் அனைத்து இடங்களுக்கும் டெலிவரி செய்யும் சேவையை தற்போது முதல் முறையாக பெங்களூரு நகரில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

ஸ்விகி நிறுவனத்தின் டெலிவரி பணியாளர்கள் மூலமாகவே ஸ்விகி கோ சேவையும் செயல்படுத்தப்பட உள்ளது. 2014-ல் துவங்கப்பட்ட ஸ்விகி நிறுவனம் 325 நகரங்களில் உள்ள 1,30,000 உணவகங்களில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்து வருகிறது.

NEXT STORY