ஸ்விக்கியின் முக்கியப் பொறுப்பில் திருநங்கை சம்யுக்தா விஜயன் - யாரிவர்?

தொழில்நுட்பம்
Updated Jul 13, 2019 | 12:11 IST | Times Now

சம்யுக்தா விஜயன் ஏற்கனவே அமேசான் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Samyuktha Vijayan
Samyuktha Vijayan  |  Photo Credit: Instagram

தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட சம்யுக்தா விஜயன் என்ற திருநங்கையை ஸ்விக்கி நிறுவனம் முதன்மைத் தொழிநுட்ப திட்ட மேலாளராக நியமித்துள்ளது. இதனால் ஸ்விக்கி நிறுவனத்துக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இவர் குறிப்பாக எல்.ஜி.பி.டி சமூக மக்களுக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். 

தற்போது சம்யுக்தா விஜயன் டவுட்ஸ் ஸ்டூடியோ என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் திருநங்கைகள் ஃபேஷன், டிசைன், மேக்-அப், ஹேர் ஸ்டைல் போன்ற அழகு சார்ந்த துறைகளில் தங்களை மேம்படுத்திக் கொள்ள உதவுகிறது. சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு முன்பு சம்யுக்தா விஜயன் ஏற்கனவே அமேசான் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2017-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஐரோப்பா, அமெரிக்காவில் பணிபுரிந்துவந்துள்ளார் சம்யுக்தா. இதனால் ஸ்விக்கி நிறுவனம், ஏற்கனவே தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்துள்ள சம்யுக்தா ஸ்விக்கி நிறுவனத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பார் எனவும் இவர் எல்.ஜி.பி.டி சமூக மக்களுக்கு உதவுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது.

தான் ஸ்விக்கி நிறுவனத்தில் வேலையில் நியமிக்கப்பட்டது குறித்து பிஸினஸ் இன்சைடருக்கு பேட்டி அளித்துள்ள சம்யுக்தா,  தற்போது கார்ப்பரேட் கம்பெனிகள் திருநங்கைகளை ஊக்குவித்து வருகிறார்கள். ஆனால் திருநங்கைகளுக்கு திறமைகள் இருந்தும் அவர்கள் படிக்க முடியாமல் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு வீட்டில் ஊக்குவித்ததாலேயே இவ்வளவு தூரம் வரமுடிந்தது. அனால் எல்லோருக்கும் அப்படி வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் திருநங்கைகளுக்கு தேவையான இண்டர்ஷிப்பையோ அல்லது பயிற்சிகளையோ வழங்கி அவங்களை வேலைக்கு அமர்த்த வேண்டும். என்றும் கூறினார். பொள்ளாச்சியில் பிறந்த சம்யுக்தா விஜயன் கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் தனது இன்ஞினியரிங் படிப்பை முடித்துள்ளார். அதன் பிறகு ஆமேசானில் 9 வருடங்களாக சென்னை, பெங்களூரு, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பணிபுரிந்தவர் சம்யுகதா விஜயன். 

NEXT STORY
ஸ்விக்கியின் முக்கியப் பொறுப்பில் திருநங்கை சம்யுக்தா விஜயன் - யாரிவர்? Description: சம்யுக்தா விஜயன் ஏற்கனவே அமேசான் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...