கிட்டதட்ட 400 கோடி ரூபாய் கூகுள் பங்குகளை பெற்றுக்கொள்ள மறுத்த சுந்தர் பிச்சை - என்ன காரணம்?

தொழில்நுட்பம்
Updated Jun 03, 2019 | 21:47 IST | Times Now

46 வயதான சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவன வளர்ச்சிக்காக பெரிதும் பணியாற்றி வருகிறார். புதிய தொழில்நுட்பங்கள், புதுமையான முயற்சிகள் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார்.

google, கூகுள்
சுந்தர் பிச்சை  |  Photo Credit: Twitter

நியூயார்க்: பிரபல கூகுள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சுந்தர் பிச்சை, கடந்த இரண்டு ஆண்டுகளாக கூகுள் தனக்கு அளிக்க முன்வந்த பங்குகளை ஏற்க மறுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ எனப்படும் தலைமைச் செயல் அதிகாரியாக கடந்த 2015ம் ஆண்டிலிருந்து பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சுந்தர் பிச்சை.  

46 வயதான சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவன வளர்ச்சிக்காக பெரிதும் பணியாற்றி வருகிறார். புதிய தொழில்நுட்பங்கள், புதுமையான முயற்சிகள் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார்.

கூகுள் நிறுவன முன்னேற்றத்தில் பெரும் பங்கு ஆற்றி வருவதால் சுந்தரின் செயல்பாட்டினைப் பாராட்டி அதே 2015ம் ஆண்டில் கூகுள் நிறுவனம் அவருக்கு 250 டாலர் மதிப்பிலான தனது பங்குகளைக் கொடுத்தது. மேலும், அந்த பங்குகளை அவர் பெயருக்கு மாற்றியதும் கூகுள் நிறுவன பங்குகளின் மதிப்பு பெருமளவு உயர்ந்தது. 

மேலும், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களில் மிக அதிக சம்பளம் பெறுபவராக உள்ளார் சுந்தர் பிச்சை. இந்நிலையில்தான், கடந்த 2016ம் ஆண்டிற்கு பிறகு கூகுளில் தான் ஏற்கனவே அதிக சம்பளம் பெற்று வருவதால் பங்குகளில் இருந்து வருகின்ற வருமானத்தை வேண்டாம் என்று மறுத்து விட்டார் சுந்தர்.  இதன்மதிப்பு தோராயமாக இந்திய மதிப்பில் 405 கோடி ரூபாய் இருக்கலாம் என்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கூகுள் அளிக்கவந்த பங்குகளை மறுத்துள்ளார் சுந்தர் பிச்சை. 

எனினும், கடந்த ஆண்டுகளில் ஊழியர்கள் சிலர் சி.இ.ஓவிற்கு மட்டும் ஏன் இவ்வளவு அதிக சம்பளம் என்று அதிருப்தி வெளியிட்டதே இதற்கான காரணம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

 

 

NEXT STORY
கிட்டதட்ட 400 கோடி ரூபாய் கூகுள் பங்குகளை பெற்றுக்கொள்ள மறுத்த சுந்தர் பிச்சை - என்ன காரணம்? Description: 46 வயதான சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவன வளர்ச்சிக்காக பெரிதும் பணியாற்றி வருகிறார். புதிய தொழில்நுட்பங்கள், புதுமையான முயற்சிகள் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola