தென்கொரியாவில் வெளியானது ‘சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி’!

தொழில்நுட்பம்
Updated Apr 05, 2019 | 15:23 IST | Times Now

சாம்சங் அதிரடியாக இந்த போனை வெளியிட்டுள்ளது. 4ஜி நெட்வொர்க் வேகம் அதிகபட்சமாக 100 Mbps வரை இருக்கும் என்றால் 5ஜி போனோ நொடிக்கு 20 ஜிபி டேட்டா வரையில் பரிமாற்றம் செய்யும் திறன் கொண்டது. 

Samsung, சாம்சங்
சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி  |  Photo Credit: Twitter

சென்னை: உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி எஸ்10 போனை சாம்சங் நிறுவனம் தென்கொரியாவில் அறிமுகம் செய்து வைத்து, விற்பனையை துவங்கியுள்ளது. 4ஜி போனை விட இதன் வேகம் கிட்டதட்ட 20 சதவீதம் மிக அதிகமாக இருக்கும் என்பது இதன் முக்கிய சிறப்பம்சம். 

தென்கொரியாவின் மூன்று பிரபல மொபைல் நிறுவங்களான எஸ்.கே.டெலிகாம், கேடி மற்றும் எல்ஜியூ பிளஸ் ஆகிய நிறுவனங்கள் இன்று இணைந்து இந்த புதிய போனை வெளியிட்டன. 

மற்ற செல்போன் நிறுவனங்களும் 5ஜி தொழில்நுட்ப ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் சோதனையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் சாம்சங் அதிரடியாக இந்த போனை வெளியிட்டுள்ளது. 4ஜி நெட்வொர்க் வேகம் அதிகபட்சமாக 100 Mbps வரை இருக்கும் என்றால் 5ஜி போனோ நொடிக்கு 20 ஜிபி டேட்டா வரையில் பரிமாற்றம் செய்யும் திறன் கொண்டது. 

இதன் மதிப்பு இந்திய மதிப்பில் கிட்டதட்ட 85,000 முதல் 89,078 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்த போனின் சிறப்பம்சங்கள்:

இதற்கு கேலக்ஸி எஸ்10 எக்ஸ் 5ஜி என்று பெயரிடப்பட்டுள்ளது.  ஆண்ட்ராய்டு வி9.0 (Pie) இயங்குதளத்தில் இயங்கக்கூடியது. 

6.7 இன்ச்ஞ் குவாட் ஹெச்.டி திரை கொண்ட வளைவான டைனமிக் டிஸ்ப்ளே போன் இது.

நான்கு பேக் சைட் கேமராக்கள் இந்த போனில் உள்ளன. 12எம்.பி+12 எம்.பி+16 எம்.பி ட்ரிப்பிள் லென்ஸ் ப்ரைமரி கேமரா, 10 எம்.பி ப்ரண்ட் கேமராவும் உள்ளது. 

8 ஜிபி ராம் என்பதால் செயல்திறன் வேகமாக இருக்கும். 

4500எம்.ஏ.ஹெச் லி-அயன் பேட்டரியைக் கொண்டுள்ளது. இதனை ரிமூவ் செய்ய முடியாது. 256 ஜிபி/512 ஜிபி என இரண்டு இண்டர்னல் ஸ்டோரேஜ்கள் இதில் உள்ளன.

இந்த ஸ்மார்ட்போன் மெஜஸ்டிக் ப்ளாக், ராயல் கோல்ட் மற்றும் க்ரவுன் சில்வர் நிறங்களில் இவை வெளியாகின்றன. 

1440*3040 பிக்சல்ஸ் கொண்ட ஸ்க்ரீன் ரெசல்யூஷன் உள்ளது. சாம்சங் எக்ஸினோஸ் 9 ஆக்டா 9820 என்கிற சிப்செட் இதில் 5ஜி தொழிநுட்பத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குவால்கோம் எஸ்டிஎம்855 ஸ்னாப் ட்ராகன் 855, ஆக்டோ கோ ப்ராசர் இதில் இருக்கிறது. 

Fingerprint Sensor, Accelerometer, Barometer, Gyro Sensor, Geomagnetic, Hall Sensor, Proximity, RGB Light Sensor, Heart Rate Sensor ஆகிய சென்சார்கள் இதில் உள்ளன. 

பேஸ் அன்லாக், என்எப்சி, வாட்டர் ப்ரூஃப், டஸ்ட் ஃப்ரூப், வயர்லெஸ் சார்ஜிங், ஐஆர்ஐஎஸ் சென்சார், குவிக் சார்ஜிங் மற்றும் சாம்சங் பே ஆகிய வசதிகளும் இதில் உள்ளனவாம். இந்த போனில் வெறும் ஒரு நொடிக்குள் முழு திரைப்படத்தை டவுன்லோடு செய்யப்படும் என்பதுடன் அதிக நெட்வொர்க் வசதியாக நேரத்தை சேமிக்கலாம். 
 

NEXT STORY
தென்கொரியாவில் வெளியானது ‘சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி’! Description: சாம்சங் அதிரடியாக இந்த போனை வெளியிட்டுள்ளது. 4ஜி நெட்வொர்க் வேகம் அதிகபட்சமாக 100 Mbps வரை இருக்கும் என்றால் 5ஜி போனோ நொடிக்கு 20 ஜிபி டேட்டா வரையில் பரிமாற்றம் செய்யும் திறன் கொண்டது. 
Loading...
Loading...
Loading...