லேண்டர் விக்ரம் உடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்த முடியுமா? விஞ்ஞானிகள் விளக்கம்

தொழில்நுட்பம்
Updated Sep 09, 2019 | 12:16 IST | Times Now

ஞாயிற்றுக்கிழமை அன்று லேண்டர் விக்ரம் இருக்கும் இடத்தை சந்திரயான் 2-ன் ஆர்பிட்டர் கண்டுபிடித்த நிலையில், காலம் கடந்துகொண்டே செல்ல அதனுடன் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்புகள் குறையும்.

Lander Vikram, லேண்டர் விக்ரம்
லேண்டர் விக்ரம் 

பெங்களூரு: லேண்டர் விக்ரம் உடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்துவது கடினம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகின்றனர். முன்னதாக, 14 நாட்களுக்குள் லேண்டர் விக்ரமை தொடர்புகொள்ள முயற்சிப்போம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் சனிக்கிழமை கூறினார். 

ஞாயிற்றுக்கிழமை அன்று லேண்டர் விக்ரம் இருக்கும் இடத்தை சந்திரயான் 2-ன் ஆர்பிட்டர் கண்டுபிடித்த நிலையில், காலம் கடந்துகொண்டே செல்ல அதனுடன் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்புகள் குறையும் என்று மூத்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருப்பினும், லேண்டர் சீராக இயங்கும் பட்சத்தில் மின்சார உற்பத்தி தொடங்கி சூரியவொளித் தகடுகள் கொண்டு பேட்டரிகளை ரீசார்ஜ் செய்ய முடியும் என்கிறார் மூத்த அதிகாரி ஒருவர்.

நிலவின் மேற்பரப்பின் மீது லேண்டர் விக்ரம் மோதியிருக்கும் என கருதப்படுகிறது. மேலும், லேண்டர் விக்ரம் நான்கு கால்களில் தரையிரங்கியிருக்க வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக லேண்டர் விக்ரம் சேதமடைந்திருக்கக் கூடும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தின் தந்தை எனக் கருதப்படும் டாக்டர் விக்ரம் சாராபாய் அவர்களது நினைவாக நிலவில் தரையிரங்கும் 1,471 கிலோ எடை கொண்ட லேண்டருக்கு விக்ரம் எனப் பெயரிடப்பட்டது. லேண்டர் விக்ரமிற்குள் நிலவின் மேற்பரப்பு மீது பயணிக்கும் 27 கிலோ எடை கொண்ட ரோவர் பிரக்யான் உள்ளது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...