அத்திவரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் நாளை காஞ்சிபுரம் வருகை

தொழில்நுட்பம்
Updated Jul 11, 2019 | 09:56 IST | Times Now

குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியசுத் தலைவர் வருகையையொட்டி சென்னையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

President Ram Nath Kovind, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
President Ram Nath Kovind   |  Photo Credit: ANI

சென்னை: அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை காஞ்சிபுரம் வருகிறார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய தனது குடும்பத்தினருடன் சென்னை வருகிறார். இதற்காக பிற்பகல் 2.10 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வருகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் செல்கிறார். அங்கு 3 மணி முதல் 4 மணிக்குள் அத்திவரதரை தரிசனம் செய்கிறார். 

குடியரசுத் தலைவரின் வருகையொட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையின் முழு கட்டுப்பாட்டுக்குள் அந்த பகுதி கொண்டு வரப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் தரிசனத்தின் போது பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தரிசனத்துக்கு பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மாலை 5 மணிக்கு சென்னை வருகிறார். அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் கிண்டியில் உள்ள காரில் ஆளுநர் மாளிகைக்கு சென்று இரவு அங்கு தங்குகிறார். 

அதன்பிறகு 13-ந் தேதி மாலை 4.35 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் ஆந்திர மாநிலம் ரேனிகுண்டாவுக்கு புறப்பட்டு செல்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் திருமலை செல்லும் அவர், அன்று இரவு மலை கோவிலில் தங்கி 14-ந் தேதி காலை திருப்பதி வெங்கடேஸ்வரரை தரிசனம் செய்கிறார். அதன்பிறகு 15-ந் தேதி காலை குடியரசுத் தலைவர் தனது குடும்பத்தினருடன் ரேனிகுண்டா விமான நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

இதேபோல் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு சனிக்கிழமை பகல் 12.55 மணிக்கு மைசூரில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். இருவரது வருகைளையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

NEXT STORY
அத்திவரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் நாளை காஞ்சிபுரம் வருகை Description: குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியசுத் தலைவர் வருகையையொட்டி சென்னையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola