அமேசானில் Oppo Reno 2F; 48MP கேமராவுடன் ரூ.25,990-க்கு விற்பனை

தொழில்நுட்பம்
Updated Oct 04, 2019 | 15:24 IST | Times Now

8GB ரேம் மற்றும் 128GB சேமிப்பிடம் கொண்ட ஓப்போ ரெனோ 2F-இன் விலை ரூ.25,990 ஆகும். வெள்ளை மட்டும் பச்சை நிறங்களில் இந்த போன் வருகிறது.

Oppo Reno 2F
Oppo Reno 2F 

ஓப்போ ரெனோ 2F ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. நேற்று முன்பதிவு நிறைவடைந்த நிலையில், அமேசான் இணையதளம் மற்றும்  கடைகளில் இந்த ஃபோன் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. நான்கு பின்புற கேமராக்கள் மற்றும் பாப் - அப் வசதி கொண்ட முன்புற கேமரா ஆகியவை ஓப்போ ரெனோ 2F ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் ஆகும்.

8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஃபோனின் விலை ரூ.25,990 ஆகும். வெள்ளை மட்டும் பச்சை நிறங்களில் வரும் இந்த போனை 0% இ.எம்.ஐ மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் வாங்கலாம். 6.53 அங்குல ஃபுல் எச்டி+ AMOLED திரை, எட்டு கோர் மீடியாடெக் ஹீலியோ P70 புராசசர், 4000mAh பேட்டரி ஆகியவை கொண்ட ஓப்போ ரெனோ 2F ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்ட் பை இயங்குதளம் கொண்டு செயல்படுகிறது.

ஓப்போ ரெனோ 2F போனில் உள்ள நான்கு கேமராக்களில் 48 மெகாபிக்சல் கொண்ட f/1.8 கேமரா, 8 மெகாபிக்சல் திறன் கொண்ட f/2.2 கேமரா, மற்றும் இரு 2 மெகாபிக்சல் திறன் கொண்ட f/2.4 கேமராக்கள் உள்ளன. மேலும், 16 மெகாபிக்சல் திறனுடன் கூடிய f/2.0 லென்ஸ் கொண்ட முன்புற பாப்-அப் கேமராவும் உள்ளது.

4G LTE இணைப்பு வசதி கொண்ட இந்த ஃபோனில் புளூடூத் 4.2, வை-ஃபை 802.11, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ-யுஎஸ்பி, 3.5மி.மீ  ஹெட்போன் ஜாக் உள்ளது. மேலும், ஆக்சிலரோமீட்டர், கைரோஸ்கோப், மேக்னெட்டோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், புராக்சிமிட்டி சென்சார் ஆகிய வசதிகளும் புதிய ஓப்போ ரெனோ 2F ஸ்மார்ட்போனில் உள்ளது.

NEXT STORY