புதுடெல்லி: ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மற்றும் ஒன்பிளஸ் தொலைக்காட்சியின் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற சீன நிறுவனமான ஒன்பிளஸ் 2014-ஆம் ஆண்டு தன் முதல் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 1-யை அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து ஒன்பிளஸ் 2, X, 3, 3T என 7 வரை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் உலகெங்கும் பலரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் ஒன்பிளஸ் போன்களுக்கு அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது அந்நிறுவனம் தனது அடுத்த படைப்பான ஒன்பிளஸ் 7டி மற்றும் முதல்முறையாக ஒன்பிளஸ் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அறிமுக விழா டெல்லியில் இன்று நடைபெற்றது.
ஒன்பிளஸ் 7டி 90Hz ப்லூயிட் டிஸ்பிலே கொண்டது. இதன் கேமராவில் 48MP வைட் லென்ஸ், 117 டிகிரி அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2x டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் 3 லென்ஸுகள் உள்ளது. இந்த போன் கிளேசியல் ப்ளூ (Glacial Blue) மற்றும் பிராஸ்டேட் ப்ளூ (Frosted Blue) என இரு வண்ணங்களில் வருகிறது. இது தவிர வெறும் 30 நிமிடங்களில் 70 சதவீதம் வரை சார்ஜ் வார்ப்பு சார்ஜ் செய்யும் 30W Warp Charge வசதியுடன் வருகிறது. மேலும் 55” QLED பேனல் கோண்ட அண்ட்ராய்டு தொலைக்காட்சியையும் அறிமுகம் செய்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
இவற்றின் விலை இன்னும் கூறப்படவில்லை. ஒன்பிளஸ் 7டி-யின் விலை ரூ.32,999 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களுக்குள் அமேசானில் இதனை வாங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.