வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளை லீக் செய்த ஒன் ப்ளஸ்

தொழில்நுட்பம்
Updated Jun 18, 2019 | 11:52 IST | Twitter

இதற்கு முன்னதாக 2017 இல் அதன் ஆக்ஸிஜன் ஓ.எஸ் மூலம் வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

OnePlus
ஒன்ப்ளஸ்  |  Photo Credit: Twitter

மொபைல் போன் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் ஒன் ப்ளஸ், பாதுகாப்பு குறைபாடால் வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளை லீக் செய்துள்ளது. இதன் பிரத்யேக ஃபீச்சரான 'ஷாட் ஆன் ஒன்ப்ளஸ்' செயலி மூலம் இந்த கோளாறு ஏற்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது. ஐபோன் குவாலிட்டி, ஆனால் விலை நம் பட்ஜெட்டுக்குள் என குறுகிய் காலக்கட்டத்தில் இளைஞர்களிடையே பிரபலம் அடைந்த நிறுவனம் ஒன் ப்ளஸ்.

இதில்  'ஷாட் ஆன் ஒன்ப்ளஸ்' என்னும் ஆப்ஷன் உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, உலகெங்கும் உள்ள ஒன் ப்ளஸ் யுசர்கள் அதனை வால்பேப்பர் ஆக பயன்படுத்த முடியும். இந்த ஆப்ஷனில் பதிவேற்றம் செய்யும் வாடிக்கையாளர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவிட வேண்டும். தற்போதய தகவல் படி ஒன் ப்ளஸ் சர்வரையும்,'ஷாட் ஆன் ஒன்ப்ளஸ்' செயலியையும் இணைக்கும் லிங்க் மூலம் வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள் லீக் ஆகி இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

'ஷாட் ஆன் ஒன்ப்ளஸ்' செயலியில் உள்ள கிட் (GID) என்ற தொழில்நுட்பம் வாடிக்கையாளர்கள் ஒன்ப்ளஸ் சர்வரிலேயே புகைப்படங்களை பதிவேற்றவும், டெலிட் செய்யவும்  உதவுகிறது. அதன் மூலம் மின்னஞ்சல் முகவரிகள் வெளியாகி இருக்கலாம் என தெரிகிறது. இதை பற்றி தகவல் அறிந்த ஒன் ப்ளஸ் நிறுவனம் அதனை சேரி செய்யும் முயற்சியில் உள்ளது. ஏற்கனவே அதிக கதிர்வீச்சு வெளியிடும் மொபைல் என்ற சர்ச்சையிலும் உள்ள சீனாவை சேர்ந்த இந்த ஒன்ப்ளஸ் நிறுவனம், இதற்கு முன்னதாக 2017 இல் அதன் ஆக்ஸிஜன் ஓ.எஸ் மூலம் வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 

NEXT STORY
வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளை லீக் செய்த ஒன் ப்ளஸ் Description: இதற்கு முன்னதாக 2017 இல் அதன் ஆக்ஸிஜன் ஓ.எஸ் மூலம் வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola