பெங்களூருவில் வெளியானது ஒன் ப்ளஸ் 7 சீரீஸ் போன்கள் - அட்டகாச சலுகைகள், அமர்க்களமான ஆபர்கள்!

தொழில்நுட்பம்
Updated May 14, 2019 | 22:57 IST | Times Now

ஒன்ப்ளஸ் வாங்கும் ஜியோ சிம் கார்டு யூஸ் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூபாய் 299க்கு ரீஜார்ஜ் செய்தால் அவர்களுக்கு 5400ரூபாய் கேஷ்பேக் வழங்கப்பட உள்ளது.

technology, தொழில்நுட்பம்
ஒன் ப்ளஸ் 7 ப்ரோ  |  Photo Credit: Twitter

சென்னை: மொபைல் போன் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ஒன்ப்ளஸ் 7 மற்றும் ஒன்ப்ளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்ஃபோன்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டன இந்த புதிய ஸ்மார்ட்ஃபோன்கள். கிட்டதட்ட 32,999 ரூபாய் விலையில் துவங்கும் இந்த போன்களை வாங்குபவர்களுக்கு அருமையான ஆஃபர்களையும் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

அதன்படி, ஒன்ப்ளஸ் வாங்கும் ஜியோ சிம் கார்டு யூஸ் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூபாய் 299க்கு ரீஜார்ஜ் செய்தால் அவர்களுக்கு 5400ரூபாய் கேஷ்பேக் வழங்கப்பட உள்ளது. 150 மதிப்பிலான 36 வவுச்சர்கள் இந்த மதிப்பில் வழங்கப்படும். 

299க்கு ரீஜார்ஜ் செய்யும் ஒவ்வொரு முறையும் 299க்கு ரீஜார்ஜ் செய்யும்போது 149 ரூபாய்க்கு வவுச்சரில் உபயோகித்துக் கொள்ளலாமாம். ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் அனைத்து சலுகைகளும் மே 19 ஆம் தேதி முதல் www.jio.com, ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்ஸ், மை ஜியோ ஸ்டோர்ஸ் மற்றும் மை ஜியோ ஆப் மூலம் கிடைக்கும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், ஒரு நாளைக்கு 4ஜி வேகத்தில் 3ஜிபி இன்டெர்நெட் டேட்டா வசதி கிடைக்குமாம். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன் ப்ளஸ் 7 ப்ரோவின் விலை 48999 ரூபாய். 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட ஒன் ப்ளஸ் 7 ப்ரோ விலை 52999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட ஒன் ப்ளஸ் 7 ப்ரோ விலை 57,999 ரூபாய். 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி கொண்ட ஒன் ப்ளஸ் 7 விலை 32999 ரூபாய் மட்டுமே. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட ஒன் ப்ளஸ் 7 விலை 39999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒன் ப்ளஸ் மற்றும் அமேசான் இணையதளங்களில் வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NEXT STORY
பெங்களூருவில் வெளியானது ஒன் ப்ளஸ் 7 சீரீஸ் போன்கள் - அட்டகாச சலுகைகள், அமர்க்களமான ஆபர்கள்! Description: ஒன்ப்ளஸ் வாங்கும் ஜியோ சிம் கார்டு யூஸ் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூபாய் 299க்கு ரீஜார்ஜ் செய்தால் அவர்களுக்கு 5400ரூபாய் கேஷ்பேக் வழங்கப்பட உள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola