விற்பனைக்கு ரெடியானது நோக்கியா 7.2 ! எங்கு, எப்படி வாங்லாம்? - முழு விவரம்

தொழில்நுட்பம்
Updated Sep 19, 2019 | 16:39 IST | Times Now

64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட நோக்கியா 7.2 போனில் 4ஜிபி ரேம் கொண்ட மாடல் ரூ.18,599-க்கும் 6ஜிபி ரேம் கொண்ட மாடல் ரூ.19,599-க்கும் விற்பனை ஆகிறது.

Nokia 7.2 launched in India, நோக்கியா 7.2 போன் விற்பனை தொடக்கம்
நோக்கியா 7.2 போன் விற்பனை தொடக்கம் 

புதிய நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. மூன்று கேமரா வசதி கொண்ட முதல் நோக்கியா ஸ்மார்ட்போன் இதுவாகும். முன்புறம் மற்றும் பின்புறம் கார்கிங் கொரில்லா கண்ணாடியுடன் கூடிய இந்த போனின் ஆரம்ப விலை ரூ.18,599 ஆகும்.

ஆண்ட்ராய்ட் 10 இயங்குதளத்திற்கு தயாராக உருவாக்கப்பட்டுள்ள நோக்கியா 7.2 போனில் இரண்டு ஆண்டுகளுக்கு இயங்குதள அப்டேட்டுகளும், மூன்று ஆண்டுகளுக்கு பாதுகாப்பு அப்டேட்டுகளும் வழங்கப்படும். ஆண்ட்ராய்ட் ஒன் உடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் படி நோக்கியா 7.2 போனில் மூன்று மாதம் கூகுள் ஒன் சேவை இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம், கூகுள் டிரைவ், ஜிமெய்ல் மற்றும் கூகுள் போட்டோ உள்ளிட்ட சேவைகளில் 100ஜிபி சேமிப்பு வசதி பெறலாம்.

64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட நோக்கியா 7.2 போனில் 4ஜிபி ரேம் கொண்ட மாடல் ரூ.18,599-க்கும் 6ஜிபி ரேம் கொண்ட மாடல் ரூ.19,599-க்கும் விற்பனை ஆகிறது. நோக்கியா இணையதளம் மற்றும் பிலிப்கார்ட் வாயிலாக புதிய நோக்கியா 7.2 போன்களை வாங்கலாம்.

அக்டோபர் 31 வரை நோக்கியா 7.2 போன்களை சில்லறை விற்பனை கடைகளில் வாங்குவோர் எச்டிஎஃப்சி கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் பயன்படுத்தி 10% சலுகை பெறலாம். அதே போல, அக்டோபர் 31 வரை Bajaj Finance, IDFC First Bank, HDFC Bank CD loans மற்றும் HDBFS ஆகியவற்றின் மூலம் வாங்குவோருக்கு முன்பணம், சேவை கட்டணம், வட்டி ஆகியவற்றில் இருந்து விலக்களிக்கப்படும்.

ஜியோ எண் பயன்படுத்துவோர் ரூ.198 மற்றும் ரூ.299 திட்டங்கள் மீது ரூ.7,200 மதிப்பிலான சலுகைகள் பெறலாம். அக்டோபர் 31 வரை நோக்கியா இணையதளன் மூலம் வாங்குவோருக்கு ரூ.2,000 மதிப்பிலான பரிசு அட்டை வழங்கப்படும்.

ஆண்ட்ராய்ட் பை இயங்குதளம் கொண்டு இயங்கும் நோக்கியா 7.2 போனில் கூகுள் அசிஸ்டண்ட் சேவைக்கான பிரத்யேக பொத்தான் உள்ளது. மேலும், ஃபுல் எச்டி+ 6.3 அங்குல திரை கொண்ட இந்த போன் ஸ்னாப்டிராகன் 660 ப்ராசசர் கொண்டு இயங்குகிறது. 48 மெகாபிக்சல் சென்சார், 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் உடன் கூடிய கேமரா இந்த போனின் சிறப்பம்சமாகும். முன்புறம் 20 மெகாபிக்சல் கேமரா கொண்ட நோக்கியா 7.2 போன் 3500mAh மின்கலம் கொண்டு இயங்குகிறது.

NEXT STORY