சென்னை: நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் இன்று வெளியானது. சர்வதேச சந்தையில் நோக்கியா x71 என்ற பெயரில் வெளியான இந்த போன் தற்போது இந்தியாவில் நோக்கியா 6.2 என்ற பெயரில் விற்கப்படுகிறது. சென்ற மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் நோக்கியா 2720 பிலிப் 4ஜி மற்றும் நோக்கியா 800 டஃப் ஆகிய போன்களுடன் நோக்கியா 6.2 அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆண்ட்ராய்ட் 9 இயங்குதளம் கொண்டு இயங்கும் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்ட் 10 இயங்குதளத்திற்கு ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு அண்ட்ராய்ட் மென்பொருள் அப்டேட்டுகள் மற்றும் 3 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு அப்டேட்டுகள் வழங்கப்படும். ஐஸ், செராமிக் பிளாக் என இரண்டு வண்ணங்களில் புதிய நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் வருகிறது.
அமேசான் இணையதளத்தில் ரூ.15.999-க்கு நோக்கியா 6.2 விற்கப்படுகிறது. எச்டிஎஃப்சி வங்கியின் டெபிட் கார்ட் கொண்டு வாங்குவோர் 10 சதவிகிதம் அல்லது ரூ.2,000 வரை தள்ளுபடி பெறலாம். எச்எஸ்பிசி வங்கி கேஷ்பேக் கார்ட் பயன்படுத்துவோர் 5 சதவிகித தள்ளுபடியுடன் கட்டமில்லா தவணை முறையில் வாங்கலாம். மேலும், உங்கள் பழைய போனை ரூ.9,400 அளவிற்கு தள்ளுபடியுடன் மற்றிக்கொள்ளலாம்.
6.3 அங்குல முழு எச்டி+ திரை கொண்ட நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன், 2.5D கார்னி கொரில்லா கண்ணாடி பாதுகாப்புடன் வருகிறது. குவால்காம் ஸ்னேப்டிராகன் 636 புராசசர், 4GB ரேம், 64GB ஸ்டோரேஜ் வசதி கொண்டுள்ள நோக்கியா 6.2 போனில், 512GB வரை சேமிப்பிட நீட்டிப்பு செய்யலாம். 3500mAh மின்கலம் கொண்டு நோக்கியா 6.2 இயங்குகிறது.
திரைக்கு இடையே காணப்படும் முன்புற பஞ்ச் ஹோல் கேமரா 8 மெகாபிக்சல் திறன் கொண்டதாகும். பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. அவை, 16 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் கேமரா ஆகியனவாகும்.