பட்டன் வைத்த Nokia 110 போன்; ரூ.1,599-க்கு விற்பனை - விவரம்

தொழில்நுட்பம்
Updated Oct 17, 2019 | 15:43 IST | Times Now

27 மணிநேரம் உழைக்கும் 800mAh பேட்டரி, 32GB வரை நீட்டிக்கக் கூடிய சேமிப்பிடம் ஆகியவை கொண்ட புதிய நோக்கியா 110-ன் விலை வெறும் ரூ.1,599 -க்கு விற்பனைக்கு வந்துள்ளது.

Nokia 110, நோக்கியா 110
நோக்கியா 110 

நோக்கியா நிறுவனத்தின் புதிய ஃபீச்சர் ஃபோனான நோக்கியா 110 நாளை முதல் விற்பனைக்கு வருகிறது. MP3 ப்ளேயர், FM ரேடியோ, ஸ்னேக் விளையாட்டு மற்றும் நீடித்து உழைக்கும் பேட்டரியுடன் புதிய நோக்கியா 110 விற்பனைக்கு வருகிறது.

கடல் நீளம், கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களில் வெறும் ரூ.1,599-க்கு நாடு முழுவதும் நாளை முதல் நோக்கியா 110 விற்கப்படுகிறது. சில்லறை விற்பனை அங்காடிகள் மற்றும் நோக்கியா இணையதளத்தில் நோக்கியா 110 ஃபோனை வாங்கலாம்.

நிஞ்சா ஆப், ஏர் ஸ்டிரைக், ஃபுட்பால் கப், டூடுள் ஜம்ப் ஆகிய விளையாட்டுகளும் சோதனை முறையில் இடம்பெறும். பிடித்திருந்தால் இந்த கேம்களை பயனாளர்கள் வாங்கிக் கொள்ளலாம். 4MB இண்டர்னல் மெமரி உள்ளது. மைக்ரோSD கார்ட் கொண்டு 32GB வரை இதனை நீட்டித்துக் கொள்ளலாம். 800mAh மின்கலம் கொண்ட நோக்கியா 110-ல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 27 மணிநேரம் வரை பாடல்கள் கேட்கலாம். ஃபோனுடன் மைக்ரோ-USB சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது.

நோக்கியா சீரீஸ் 30+ மென்பொருள் கொண்டு இயங்கும் நோக்கியா 110 போன் 1.77 அங்குல திரை கொண்டுள்ளது. இரு சிம் கார்டுகள் பயன்படுத்தும் வசதியும், 3.5mm ஹெட்போன் துளையும் உள்ளது.

நோக்கியா போன்களை தயாரிக்கும் HMD குளோபல் நிறுவனத்தின் ஆசியா-பசிபிக் மற்றும் இந்தியா பிரிவின் தலைவர் அஜய் மேத்தா கூறியதாவது: “இந்தியாவின் ஃபீச்சர் போன் வாடிக்கையாளர்களுக்கு தொலைதொடர்பு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட தனித்துவமிக்க அதே சமயம் நீடித்து உழைக்கும் நம்பகமான ஃபோனாக நோக்கியா 110 உள்ளது.

மியூசிட், கேமரா, கேம்ஸ் மற்றும் பல அம்சங்கள் கொண்ட நோக்கியா 110, ஃபீச்சர் போன் ரகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்தியாவின் ஃபீச்சர் போன் ரகத்தில் இந்த அழகான போனையும் சேர்ப்பதில் உற்சாகம் கொள்கிறேன். ஆன்லைன் அல்லது சில்லறை விற்பனை அங்காடிகளின் வாடிக்கையாளர்கள் இதனை வாங்கலாம்.” இவ்வாறு அஜய் மேத்தா கூறினார். 

NEXT STORY