நிலவில் பெண்: நாசாவின் புதிய திட்டம்!

தொழில்நுட்பம்
Updated May 14, 2019 | 13:10 IST | Times Now

2024 ஆம் ஆண்டுக்கள் நிலவில் முதல் பெண்ணை தரையிறக்கும் நாசாவின் புதிய திட்டத்திற்கு ஆர்ட்டிமிஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நிலவில் பெண்-நாசாவின் புதிய திட்டம்
நிலவில் பெண்-நாசாவின் புதிய திட்டம்  |  Photo Credit: PTI

வாஷிங்டன்: நிலவில் முதல் பெண்ணை தரையிறக்கும் நாசாவின் புதிய திட்டத்திற்கு ஆர்ட்டிமிஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கள் இத்திட்டத்தை நிறைவேற்ற நாசா திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக நாசாவுக்கான நிதி ஒதுக்கீட்டை அமெரிக்க அரசு அதிகரித்துள்ளது. நிலவில் மனிதன் தரையிறங்கி ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப்பின், முதன்முறையாக பெண் ஒருவரை அங்கு தரையிறக்க நாசா முடிவெடுத்துள்ளது.

ஆர்ட்டிமிஸ் என்பது கிரேக்கத்தில் நிலாப் பெண் கடவுளின் பெயராகும். மேலும் ஆர்ட்டிமிஸ் கிரேக்க பெண் கடவுளான அப்பல்லோவின் சகோதரியாக கருதப்படுகிறார். அப்பல்லோ திட்டத்தின்படியே 1960 மற்றும் 70 களில் மனிதன் முதன்முறையாக நிலவில் தரையிறக்கப்பட்டார்.

இத்திட்டத்திற்காக அமெரிக்க அதிபர் நாசாவிற்கான நிதி ஒதுக்கீட்டை 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்துள்ளதாக நாசாவுக்கான நிர்வாக அதிகாரி ஜிம் பிரிட்டைன்ஸ்டைன் தெரிவித்துள்ளார். இதன்மூலம், விண்வெளித் திட்டத்தை மிகப்பெரிய அளவில் திரும்ப செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனது நிர்வாகத்தின்கீழ் நாசாவை மிகப்பெரிய அளவுக்கு எடுத்துச் செல்ல உள்ளேன் என்றும் மீண்டும் நிலவுக்குச் செல்ல உள்ளோம் என்றும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதவிட்டுள்ளார்.

இதுவரை நிலவில் 12 மனிதர்கள் மட்டுமே தரையிறங்கியுள்ளனர். இவர்கள் அனைவருமே அமெரிக்கர்கள் என நாசாவின் செய்தித்தொடர்பு இயக்குநர் பெட்டினா இன்க்லான் தெரிவித்துள்ளார். கடைசியாக 1972 ஆம் ஆண்டு நிலவில் இன்க்லான் தரையிறங்கினார். இதுவரை எந்தப் பெண்ணும் நிலவில் தரையிறங்கவில்லை. எனவே இந்த முதலீடு நாசாவின் திட்டத்தை முன்னேடுத்துச் செல்வதாக அமையும் என நாசா நிர்வாக அதிகாரி பிரிட்டைன்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்க விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்க புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் பூர்வமான திட்டங்களை நாசா மேற்கொள்ள உள்ளதாகவும், அதற்காக நாசா மையத்தில் புதிதாக ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 

NEXT STORY
நிலவில் பெண்: நாசாவின் புதிய திட்டம்! Description: 2024 ஆம் ஆண்டுக்கள் நிலவில் முதல் பெண்ணை தரையிறக்கும் நாசாவின் புதிய திட்டத்திற்கு ஆர்ட்டிமிஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola