அறிவியல் வரலாற்றில் மைல்கல் - ‘பிளாக் ஹோல்’ என்னும் கருந்துளை புகைப்படத்தை வெளியிட்டது நாசா!

தொழில்நுட்பம்
Updated Apr 10, 2019 | 22:18 IST | Times Now

பூமியிலிருந்து சுமார் 5.4 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் விண்வெளியில் இருக்கும் இந்த கருந்துளையானது, எம்87 என்று அழைக்கப்படும் பால்வெளி மண்டலம் ஒன்றில் உள்ளது. இது சூரியனை விட மிகவும் பெரியது.

Nasa, நாசா
கருந்துளை புகைப்படம் - நாசா  |  Photo Credit: Twitter

நியூயார்க்: உலகமே வியப்பில் விழிவிரிக்கும் வகையில் நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலாக ‘பிளாக் ஹோல்’ எனப்படும் கருந்துளையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். 

பூமியிலிருந்து சுமார் 5.4 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் விண்வெளியில் இருக்கும் இந்த கருந்துளையானது, எம்87 என்று அழைக்கப்படும் பால்வெளி மண்டலம் ஒன்றில் உள்ளது. இது சூரியனை விட மிகவும் பெரியது.

ஈஹெச்டி (EHT) தொலைநோக்கித் திட்டம் கடந்த 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்தது. அமெரிக்காவின் தேசிய அறிவியல் அமைப்பின் இணையதளத்தால் ஈவெண்ட் ஹாரிஷன் தொலைநோக்கி திட்டம் என்றழைக்கப்படும் இத்திட்டம் பிளாக் ஹோல் எனப்படும் கருந்துளை பற்றிய தகவல்கள் சேகரிக்கவும், பிளாக் ஹோலைச் சுற்றியுள்ள சூழல்கள் கண்காணிக்கவும் ஏதுவாய் இருந்தது. 

ஒவ்வொரு பால்வெளி மண்டலம் எனப்படும் கேலக்ஸியின் நடுவிலும் ஒரு மிகப்பெரிய கருந்துளை இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கருந்துளையின் ஈர்ப்பு சக்தியானது மிகவும் அதிகம் என்பதால் இதற்குள் ஒளி ஊடுருவமுடியாமல் ஈர்க்கப்பட்டுவிடும். 

இந்நிலையில்தான், மிகுந்த கடினப்பாதைகளுக்குப் பிறகு ஈஹெச்டி தனது முதல் புகைப்படத்தை படம்பிடித்து வெளியிட்டுள்ளது. பூமியில் இருக்கும் 8 தொலைநோக்கிகளைக் கொண்டு படம் எடுத்துள்ளது இந்த ஈஹெச்டி குழு.

ஒரு கருப்பு பந்தைச் சுற்றி பிரகாசமான ஒளிக்கங்கு சூழ்ந்திருப்பதைப் போன்று வெளியிட்டிருக்கப்படும் இப்புகைப்படம் உலகம் முழுவதும் அறிவியல் ஆர்வலர்கள் மற்றும் மக்களிடம் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் இதன்மூலம் நாசா ஒரு மைல்கல்லைப் பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

NEXT STORY
அறிவியல் வரலாற்றில் மைல்கல் - ‘பிளாக் ஹோல்’ என்னும் கருந்துளை புகைப்படத்தை வெளியிட்டது நாசா! Description: பூமியிலிருந்து சுமார் 5.4 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் விண்வெளியில் இருக்கும் இந்த கருந்துளையானது, எம்87 என்று அழைக்கப்படும் பால்வெளி மண்டலம் ஒன்றில் உள்ளது. இது சூரியனை விட மிகவும் பெரியது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola