இதல்லவோ ஆஃபர் - இலவச செட் ஆஃப் பாக்ஸ், 4K டிவி! - அசத்தும் ஜியோ

தொழில்நுட்பம்
Updated Aug 12, 2019 | 14:17 IST | Times Now

100 Mbps முதல் 1 Gbps வரை வேகத்துடன் கூடிய இந்த இணைய சேவை மாதம் ரூ. 700 முதல் ரூ. 10,000 வரையிலான சந்தா கட்டணத்தில் வழங்கப்பட இருக்கிறது.

Mukesh Ambani
முகேஷ் அம்பானி  |  Photo Credit: YouTube

மும்பை: ஜியோ நிறுவனத்தின் பிராட்பேண்ட் இணைய சேவையான ஜியோ GigaFiber செப்டம்பர் 5ஆம் தேதி பயன்பாட்டுக்கு வரும் என ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். அந்நிறுவனத்தின் 42வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

100 Mbps முதல் 1 Gbps வரை வேகத்துடன் கூடிய இந்த இணைய சேவை மாதம் ரூ. 700 முதல் ரூ. 10,000 வரையிலான சந்தா கட்டணத்தில் வழங்கப்பட இருக்கிறது. ஜியோ GigaFiberன் சிறப்பம்சமாக லேண்ட்லைன் மற்றும் தொலைக்காட்சி செட்டாப் பாக்ஸ் சேவைகள் இணைக்கப்படுகிறது.

வரவேற்பு சலுகையாக புதிதாக பதிவு செய்பவர்களுக்கு HD அல்லது 4K LED தொலைக்காட்சி இலவசமாக வழங்கப்படும். இதனுடன், 4K செட்டாப் பாக்ஸும் வழங்கப்பட உள்ளது. சோதனை சேவையின் போது 100 Mbps வேகத்தில் 100 GB டேட்டா  40 GB நீட்டிப்பு வசதியுடன் வழங்கப்பட்டு வந்தது. 1,600 நகரங்களில் இருந்து 15 மில்லியன் பேர் இச்சமயத்தில் பதிவு செய்தனர். அடுத்த ஓராண்டில் இந்த எண்ணிக்கை 20 மில்லியனாக உயரும் என அந்நிறுவனம் கணித்துள்ளது.

Image

Image

 

கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுடன் இணைந்து ஜியோ செட்டாப் பாக்ஸ் சேவை வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஜியோ GigaFiberல் தொலைபேசி அழைப்புகளை இலவசமாக செய்யலாம். சர்வதேச அழைப்புக்கான சேவைகள் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NEXT STORY
இதல்லவோ ஆஃபர் - இலவச செட் ஆஃப் பாக்ஸ், 4K டிவி! - அசத்தும் ஜியோ Description: 100 Mbps முதல் 1 Gbps வரை வேகத்துடன் கூடிய இந்த இணைய சேவை மாதம் ரூ. 700 முதல் ரூ. 10,000 வரையிலான சந்தா கட்டணத்தில் வழங்கப்பட இருக்கிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola