Moto G8 Plus ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. மோட்டோ ‘ஜி’ வரிசையில் புதிய வரவாக Moto G8 Plus ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது.
மூன்று கேமரா வசதி கொண்ட Moto G8 Plus போனில், 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 16 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆக்ஷன் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் கேமரா ஆகியவை உள்ளன. முன்புறம் 25 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
நீலம் மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களில் வரும் புதிய Moto G8 Plus ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999 ஆகும். ஃபிலிப்கார்ட் இணையதளத்தில் பிரத்யேகமாக இம்மாத இறுதியில் இந்த போன் விற்பனைக்கு வரவுள்ளது. இருப்பினும், வெளியீட்டு தேதியை மோடோரோலா நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.
அறிமுகச் சலுகைகளாக ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.2,200 மதிப்புள்ள சலுகை, கிளியர்ட்ரிப் நிறுவனத்தின் ரூ.3,000 மதிப்புள்ள கூப்பன், ரூ.2,000 மதிப்புள்ள ஜூம் கார் வௌச்சர்கள் ஆகியவை வழங்கப்படுன்றன.
6.3 அங்குல திரை கொண்ட முழு எச்டி+ எல்சிடி திரை கொண்டது Moto G8 Plus ஸ்மார்ட்போன். 1.8GHz வேகம் கொண்ட எட்டு கோர் ஸ்னேப்டிராகன் 665 புராசசர், 4GB ரேம், ஆண்ட்ராய்ட் 9.0 இயங்குதளம், 15W வேகத்தில் சார்ஜ் ஆகும் 4000mAh மின்கலம் ஆகியவை கொண்டு Moto G8 Plus ஸ்மார்ட்போன் இயங்குகிறது.
188 கிராம் எடை கொண்ட இந்த போனில், 64GB ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும், மைக்ரோSD கார்டு கொண்டு 512GB வரை சேமிப்பிட நீட்டிப்பு செய்யலாம். போனின் பின்புறத்தில் கைரேகை சென்சாரும் உள்ளது.